
இறுதிக்கட்டப் போர் நடந்தவேளை, புலிகளின் அரசியல் தலைவர்கள் 300 காயப்பட்ட போராளிகள், குழந்தைகள், மற்றும் பெண்களோடு சரணடைந்திருந்தனர். அதில் நடேசன் உட்பட, புலித்தேவன் ரமேஷ் போன்றோர் இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அத்தோடு காயம் அடைந்த 300 போராளிகளுக்கும் என்ன ஆனது என்று தெரியவில்லை. அவர்களும் கொல்லப்பட்டே இருக்கவேண்டும் என பலர் தெரிவித்துவருகின்றனர். இந் நிலையில் புலிகள் இயக்கத்தோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, சரணடையும் அரசியல் தலைவர்களின் உயிருக்கு உத்தரவாதம் கொடுத்தவர் விஜய் நம்பியார். ஆனால் அது காப்பாற்றப்படவில்லை. மாறாக அனைவரும் இறந்துள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக