01 பிப்ரவரி 2011

மகிந்தரின் ஆச்சரியம் கீழ்த்தரமான ஆச்சரியம்!

லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் அலுவலகம் தீ வைக்கப்பட்டமைக்கு எதிராக ஊடக அமைப்புகளின் ஒன்றியம் கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள், சிவில் வெகுஜன அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்.
லங்கா ஈ நியுஸ் இணையத்தளத்தின் அலுவலகம் தீ வைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஊடக அமைப்புக்களினால் பாரிய ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.
இன்று நன்பகல் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டமருகில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாடத்தின் போது, சட்டம் ஒழுங்கு சீர்குழைந்து விட்டது, நாடு பாதாளத்தை நோக்கி, ஆசியாவின் ஆச்சரியம் சண்டியரைக் காக்கும்; ஆச்சரியம், மஹிந்தவின் ஆச்சரியம், கீழ்த்தரமான ஆச்சரியம், ஊடகவியலாளர்களை கொலை செய்யும் அரசாங்கம் - சண்டியர்களைக் காக்கும் அரசாங்கம், கைகளை வெட்டினாலும், வாயை வெட்டினாலும் நாம் எழுதுவோம், சாம்பலாக்கினாலும் துப்பாக்கி பிரயோகம் நடத்தினாலும் நாம் எழுதுவோம். ஊடகங்களை கட்டுப்படுத்த தாக்குகின்றனர், எரிக்கின்றனர் ஊடக அமைச்சர்கள் இருவர் உள்ளனர். அவர்களால் பிரயோசனம் இல்லை, போன்ற கோஷங்களை எழுப்பினர். அத்துடன் ஊடக அடக்கு முறையின் புதிய சம்பவம் லங்கா ஈ நியுஸ் மீதான தீவைப்பு, ஊடகசுதந்திரத்தை பாதுக்கவேண்டும் போன்ற பாதாதைகளையும் கொண்டிருந்தனர்.
இந்த ஆர்ப்பர்ட்டத்தில் அரசியல் தலைவர்களான விக்கரமபாகு கருணாரத்ன, சிறிதுங்க ஜயசூரிய, தயாசிறி ஜயசேகர, திஸ்ஸ அத்தநாயக்க, விஜித்த ஹேரத், சுனில் அந்துன்நெத்தி, டிரான் அலஸ், அனோமா பொன்சேக்காக ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக