தமிழர் வாழ்விலும் வரலாற்றிலும் முதல் பதிவாக முக்கியத்துவம் பெறுகிறது. தமிழீழத் தாய்,தந்தையின் மரணப் பிரிவு.
வீரன் பிறந்த பூமியில் இன்று வீரம் பேசுகிறான் சிங்களவன், நிச்சயம் விரட்டி அடிப்பார்கள் வேலுப்பிள்ளையின் பேரமக்கள் விரைவாக!!
மக்களோடு மக்களாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் தாய் தந்தையர் இருவரும் வட்டுவாகல் பகுதியில் இருந்து முட்கம்பி முகாம் நோக்கி கொண்டு செல்லப்பட்ட அன்றைய சம்பவங்களை நேரில் பார்த்தவர்கள் இன்றும் அதை நினைத்து அந்தக் காட்சிகளை வர்ணிக்கவும் முடியாமல் விபரமாகச் சொல்லவும் முடியாமல் அழுது கண்ணீர் வடிப்பவர்கள் ஏராளம் கல்நெஞ்சரையும் உருகவைக்கும் சோக நிகழ்வாகவே நினைத்து அவர்கள் இன்றும் மனம் உருகுகிறார்கள்.
பக்க வாதத்தால் பாதிக்கப்பட்ட தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் தாயார் சக்கர நாற்காலியில் வைத்து அந்த ஐனசமுத்திரத்தின் ஊடாகத் தள்ளிச் செல்லப்பட்ட காட்ச்சியும். இரத்த அழுத்தம் உட்பட வயிற்றோட்டம், தலைச்சுற்று போன்ற நோய்களால் துன்புற்ற சுயமாக நடக்க முடியாமல் நடந்த தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் தந்தையை தூக்கிச் செல்ல முன்வந்த உறவுகளின் உதவியையும் ஏற்க மறுத்தார். அவர் பலமுறை தரையில் வீழ்வதும் எழுவதுமாக மீண்டும் மீண்டும் வீழ்ந்து எழுந்தே கொடியவரின் சித்திரவதை குகை நோக்கிய வீரப் பயணத்தை அன்றைய நாளில் தொடர்ந்திருந்தார்.
பல இன்னல்களைக் கடந்து செட்டிகுளம் முகாமுக்கு சென்ற இருவரையும் இராணுவப் புலனாய்வாளர்கள் கைது செய்து கொழும்புக்குக் கொண்டு சென்றனர் நாலாம் மாடியிலும் இன்னும் பல இடங்களிலும் வைத்து சித்திரவதகளுக்கு உட்படுத்தப்பட்டார்கள் இவர்களுக்காக தனித் தனி சிறைகளில் அடைக்கப்பட்டார்கள் பார்ப்பதற்கோ உதவி செய்வதற்கோ யாரும் அனுமதிக்கப் படவில்லை இராணுவத்தினர் மட்டும் ஆயுதம் ஏந்தியபடி எப்பொழுதும் நின்றிருப்பார்கள்.
இளைப்பாறிய அரச ஊழியரான வேலுப்பிள்ளையின் மாதாந்த ஓய்வூதியக் கொடுப்பனவு அரசினால் நிறுத்தப்பட்டது. அவருக்கு என்ன வகை உணவளித்தார்கள் எப்படி பராமரித்தார்கள் எப்படிப்பட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டதோ தெரியவில்லை. தேசியத் தலைவரின் தந்தை இராணுவ சித்திரவதைகளின் காரணமாக கொழும்பு சிறைச்சாலை ஒன்றில் தமிழீழ தேசத்தின் தந்தையாக வீரகாவியமானார். அவருடைய வித்துடல் வீரத்தின் பிறப்பிடத்திர்க்கே கொண்டு வரப்பட்டு அங்கு தகனஞ் செய்யப்பட்டது.
அதன் பின்னர் அன்னை பார்வதியம்மாளின் உடைநிலை இன்னும் மோசமடைந்தது புலம் பெயர்ந்து வாழும் அவரது பிள்ளைகளுடன் சேர்வதற்கு பெரும் முயற்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அவர் விரும்பிய நாட்டிற்குச் சென்று சிகிச்சை பெறலாம் என்று மகிந்த அரசு அறிவித்தது ஆனால் சிங்கப்பூர் மலேசியா தவிர வேறு நாடுகளுக்கு அன்னையால் செல்ல முடியவில்லை அப்படியிருந்தும் சில முயற்ச்சிகளை எம்.கே. சிவாசிலிங்கம் அவர்கள் மேற்கொண்டிருந்தார்.
கொழும்பு, கோலாலம்பூர், சென்னை என்று எமது தேசத்தின் தாயார் அலைக்கழிக்கப்பட்டார் கோலாலம்பூரில் அவருக்கு இந்தியாவில் மருத்துவம் பெறுவதற்க்கான அனுமதியும் வழங்கப்பட்டது சென்னைக்குச் செல்லும் உள்நுளைவு அனுமதியை இந்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் அவர்களால் வழங்கப்பட்டது. சிகிச்சைக்காக சென்னை சென்ற பார்வதி அம்மாவை சென்னை விமான நிலையத்தில் வைத்தே விமானத்தை விட்டு வெளியில் வரவிடாமல் பண வெறியன் கருணாநிதியின் ஏற்பாட்டில் அவரை உள் வரவு திணைக்கள அதிகாரிகள் மீண்டும் கோலாலம்பூருக்குத் திருப்பி அனுப்பினர்.
பின்னர் வீசா வழங்களில் தவறு நடந்து விட்டதாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் மனநோயாளிகள் போல நாடகமாடினார்கள். பார்வதியம்மாளுக்கு நடந்தது பற்றித் தனக்கு ஒன்றுமே தெரியாது என்றும் கருணாநிதி கதை அளந்தார். பார்வதி அம்மா வரும் செய்தி தனக்குத் தெரியாது என்றும் தனக்கு அறிவித்துவிட்டு வந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்காது என்றும் கதை எழுதினார். எமது அன்னை இந்தியத் தூதரகத்தில் சட்டப்படி அனுமதி பெற்றே சென்னை வந்தார் அன்னையை அங்கிருந்து அழைத்துச் செய்வதற்கு தமிழின உணர்வாளர்கள் தயாராகவே இருந்தார்கள் அப்படியிருக்க உணர்வற்று உருக்குலைந்து போகக் கிடக்கும் ஜடத்திற்கு (கரினாய்க்கு)அறிவிக்க வேண்டியதன் அவசியம் தான் என்ன இருந்தது எமக்கு.
இந்த கரி நாயின் செயற்பாட்டை நியாயப்படுத்திய சுப.வீரபாண்டியன் அவர்களும் பார்வதி அம்மாள் சென்னை வருவது தொடர்பான தகவல்கள் எதுவும் தங்களுக்கு வழங்கப்படவில்லை அப்படி வழங்கியிருந்தால் தாங்கள் விமான நிலையத்தில் இருந்து தாயாரை அழைத்துச் சென்றிருப்பார்களாம். என்னய்யா தமிழ்நாட்டு சட்டம். நெடுமாறன், வைக்கோவிற்கு, ஒருசட்டம். கருணாநிதி, சுப,வீக்கு இன்னொரு சட்டமா? எந்தச் சட்டம் எப்படியாவது இருந்துவிட்டுப் போகட்டும் அது அவரவர் இலாப நோக்கம் கொண்டது. ஆனால் கருணாநிதியுடன் கூட்டுச் சேர்ந்து அன்னையை தமிழகத்துக்குள் வரவிடாமல் திருப்பி அனுப்பியவர்களே தமிழீழ தேசத்தின் தாயின் இன்றைய உயிர் பிரிவுக்கும் காரணமானவர்கள். இந்தப் பழி கருணாநிதி சுப.வீரபாண்டியன் உட்பட இன்னும் பலரை சூழ்ந்து கெள்ளும்.
ஒரு நாடு பலதடவைகள் வல்லரசாகிய சனநாயக பாரத தேசத்தின் ஜனநாயகம் இதுதானா எம்மைப் பொறுத்த வரையில் பார்வதியம்மாளின் மருத்துவத்திர்க்கான பயணத்தில் தமிழக அரசு நயவஞ்சகமாகப் பழி தீர்த்துள்ளது காட்டு மிராண்டித் தனமாக நடந்துள்ளது. பாரதம் திரும்பி வரும்படி பார்வதியம்மாளை அழைத்தது. இது வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவதும் பனை ஏறி வீழ்ந்தவனை மாடு ஏறிமிதிப்பதும் போன்ற செயலுக்கு சமமாகும். திருப்பி அழைத்தவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையில் தலை நிமிர்ந்து நிற்க முடியாதபடி அன்னை சரியான பாடம் புகட்டிவிட்டார். அவர் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் தாய், சுட்டெரிக்கும் சூரியனைப் பெற்ற கருவறை, தமிழ் இனத்தின் குலதெய்வம், என்னுயிர் போகட்டும் என் மண்ணில் என்று கூறி தாயின் தாயகம் வந்துவிட்டார் விட்டார்.
கயவரின் ஆளுகையில் இருக்கும் தமிழகம் செல்ல மறுத்து தன் தேசம் வந்த வீரத்தாய், பார்வதியம்மாளுக்கு யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. உடலும் உயிரும் சோர்வுற்ற நிலையில் கொடிய நோய்களின் தாக்கத்தின் காரணமாக 20.02.2011 காலை 6.10 மணியளவில் மனித உருவில் இருந்த எம் தெய்வத்தாய் மனித உடலை விட்டுப் பிரிந்து இந்த உலகில் வாழும் தமிழர்களின் குலதெய்வமாக தமிழர் வரலாற்றில் நிலைத்துவிட்டார்.
அன்னையின் பிரிவால் துயருற்றிருப்பவர்களுக்கு எமது இணையம் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம் அவர்களின் துயரிலும் நாம் பங்கெடுத்துக் கொள்கிறோம்
தமிழீழ மக்களின் இன்றைய இக்கட்டான காலகட்டத்தின் இலங்கையின் கொடிய மனித வாழ்க்கையின் வெளிப்பாட்டைத் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் பெற்றாரின் இறுதி கால வரலாற்றில் காணலாம் இருவரையும் செட்டிக்குளம் வர உதவியவர்கள் கூட சிங்களத்தின் சிறைகளில் சித்திர வதைகளை அனுபவிக்கின்றனர். என்றால் வஞசம் தீர்க்கும் கொடிய அரசின் உண்மைத் தன்மையை புரிந்துகொள்வது ஒன்றும் அவ்வளவு கஸ்ரமான விடையமல்ல மிகவும் இலகுவாகவே புரிந்துகொள்ள முடியும்.
அன்னையின் உயிர் பிரிவின் காரணமாக உலகத் தமிழர்கள் இன்று விழித்து எழிச்சி கொண்டு எழுந்துள்ளனர். மீண்டும் எமக்கான புனிதப்போரின் அவசியத்தை உணர்ந்து அந்த பெருந்தலைவரின் வழியில் அணிவகுக்க உலகத் தமிழர்கள் தயாராகியுள்ள இன்றைய காலகட்டத்தில் நான் பெரிது நீ பெரிது என்று போட்டிபோடும் தமிழ் உணர்வாளர்கள் ஓர் அணியில் திரள்வதற்கு எந்தவகையான முயற்ச்சிகளை மேற்கொள்கிறார்கள் என்பதே இன்றைய நாளில் அவர்களுக்கான கேள்வி???.
எமக்கான நேரம் நெருங்குகிறது எம் தேசியத் தலைவரை மக்கள் முன் அழைத்து வருவதற்கான முயற்ச்சிகளை நாங்கள் ஒவ்வெருவரும் தான் முன்னெடுக்க வேண்டும். ஆகவே எனது தாய் எனக்கான தாய், எமது தேசியத் தலைவரின் தாய் தமிழீழ தேசத்தின் தாய், தமிழ் மக்களின் தாய், அதனால் இன்று நடைபெறும் ஈழத் தாயின் இறுதிக் கிரிகைகளில் அன்னை பெற்ற பிள்ளைகள் இல்லை என்ற வாதத்தை தூக்கி வீசுங்கள். நாங்கள் நீங்கள் அனைவரும் ஈழத்தாயின் பிள்ளைகள்தான் ஆகவே இன்று அன்னையின் அருகில் இருக்கும் பிள்ளைகள் தங்களுடைய கடமைகளை செய்யட்டும். அன்னையின் உடலை எரியூட்டும் இன்றைய நாளில் நாங்கள் எமக்கான கடமைகளை நாம் வாழும் தேசங்களில் சரிவரச் செய்வோம் என அன்னை எரியும் நெருப்பின் மீது உறுதி எடுத்துக்கொள்வோம். இல்லையெனில் எமது ஈழத்தாய்க்கு அல்ல எம்மைப் பெற்ற தாய்க்கே பிள்ளைகளாக இருக்க நாம் தகுதியற்றவர்கள்.
தமிழீழ தேசத்தின் தாய் தந்தையருக்கான முழுமையான தமிழ் இனத்தின் கௌரவம் எமது தேசியத் தலைவரின் முன்னிலையில் உலகத் தமிழர்களால் இந்த உலகம் வியக்கும் வண்ணம் வழங்கப்படும் அப்போது உலகத் தமிழர்கள் நெஞ்சு நிமிர்த்தி தலை நிமிர்வார்கள். அதேநேரம் இலங்கை இந்தியா உட்பட உலக நாடுகள் தமது தலைகளை குனிவார்கள்.
வீரன் பிறந்த பூமியில் இன்று வீரம் பேசுகிறான் சிங்களவன், நிச்சயம் விரட்டி அடிப்பார்கள் வேலுப்பிள்ளையின் பேரமக்கள் விரைவாக!!
தி.தமிழரசன்,
ஈழம்5.இணையம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக