14 பிப்ரவரி 2011

வர்த்தக நிறுவனங்களால் ஏமாற்றப்படும் இளைஞர் யுவதிகள்!

தென்னிலங்கையில் இருந்து வரும் நிறுவனங்களால் யாழ்ப்பாணத்திலுள்ள தொழில்வாய்ப்பு அற்றிருக்கும் இளைஞர் யுவதிகள் ஏமாற்றப்பட்டு வருவதாக தொழில் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
யுத்தம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்புக்களைப் பெற்றுத்தருவதாகக் கூறி யாழ்ப்பாணத்தில் பல நிறுவனங்களும், கம்பனிகளும் தமது கிளைகளைத் திறந்து வருகின்றன. இவ்வாறான நிறுவனங்கள் பத்திரிகைகள் வாயிலாக ஆட்கள் தேவை என விளம்பரப்படுத்தி ஆட்களைத் தேர்ந்தேடுத்தபின் 3 மாதம் 6 மாதங்களென கொடுப்பனவுகளை வழங்காது தமது கிளைகளை
மூடிவிட்டு சென்றுவிடுகின்றனர்.
இவ்வாறான இரண்டு சம்பவங்கள் தொழில் திணைக்களத்திற்குக் கிடைக்கப்பெற்று மேலதிக விசாரணைக்காக கொழும்பு தலைமை அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தென்னிலங்கையில் வத்தளைப் பகுதியிலுள்ள சோடாக் கம்பனி ஒன்று 6 மாத காலமாக யாழப்பாணத்தில் தனது வியாபார நடவடிக்கையை ஆரம்பித்து ஊழியர்களுக்கு கொடுப்பனவுகள் எதையும் வழங்காது மூடிச்சென்றுள்ளது. இது தொடர்பாக யாழ் உதவித் தொழில் ஆணையாளர் அலுவலகத்திற்கு முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ள தாக தெரியவருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக