வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டியது அவசியமானது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்திற்கு அமைவாக அதிகாரங்கள் பகிரப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண காவல்துறை அலகொன்றை அமைப்பதற்கு சட்டத்தில் இடமிருந்த போதிலும் அரசாங்கம் அதனை உருவாக்கத் தவறியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மாகாண சபைகளுக்கு காவல்துறை அதிகாரம் அவசியமில்லை என பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ள போதிலும் அதனை ஒர் தனிப்பட்ட நபரின் கருத்தாகவே கருத வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒட்டு மொத்த தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாண மக்கள் சோதனைச் சாவடிகளில் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
காவல்துறை மா அதிபரே நாட்டின் காவல்துறைக்கு தலைவராக திகழுவார் எனவும், மாகாண காவல்துறை அலகுகளை உருவாக்குவதில் சிக்கல் ஏற்படாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குமரன் பத்மநாதனின் நடவடிக்கைகள் குறித்து ஆனந்தசங்கரி சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
மீளவும் வன்முறைகளைத் தூண்டக் கூடிய செயற்பாடுகளில் குமரன் பத்மநாதன் இறங்கக் கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக