19 பிப்ரவரி 2011

யாரும் சந்திக்க முடியாத வகையில் ஐயாயிரம் போராளிகள் தடுப்பு முகாம்களில்!

இலங்கையில் யுத்தம் முடிவுற்று 21 மாதங்களாகிய பின்னரும் முன்னாள் போராளிகள் என சந்தேகிக்கப்படும் சுமார் 5,000 பேர் முகாம்களில் உள்ளதாக ஐ.நாவின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
மேற்படி போராளிகள் ஐ.நா. மற்றும் செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் அணுகப்பட முடியாத வகையில் முகாம்களில் வைக்கப்பட்டிருப்பதாகவும் ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிடப் பிரநிதி நீல் புஹ்னே கூறியுள்ளர்.அதேவேளை கண்ணிவெடிகள் காரணமாக மேலும் 18000 தமிழர்கள் நலன்புரி முகாம்களில் வைக்கப்பட்டிருப்பதாகவும் புஹ்னே தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக