06 பிப்ரவரி 2011

படை முகாம்கள் வெள்ளத்தில் மூழ்கின!

திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அனுராதபுர மாவட்டங்களில் பல படைமுகாம்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் படையினர் அங் கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.திருகோணமலை மாவட்டத்தில் சிற்றாறு படைமுகாமும், அனுராதபுர மாவட்டத்தில் யஹாரவப்பொத்தானை படை முகாமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொப்பிக்கல மற்றும் வாகரைப் பிரதேசங்களில் அமைந்திருந்த படைமுகாம்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதனால் இம் முகாம்களில் இருந்த படையினர் அவசரமாக வெளியேற்றப்பட்டு இம் முகாம்கள் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக படைத்தரப்பின் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபொஸ் பெரேரா தெரிவித்தார். அத்துடன் மட்டக்களப்பில் வெள்ள நிவாரணப்பணிகள் மற்றும் மீட்புப் பணிகளில் படைத்தரப்பைச் சேர்ந்த 200குழுக்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதே வேளை மட்டக்களப்பு- மன்னம்பிட்டி வீதியில் ஏழு அடி உயரத்திற்கு வெள்ளம் பாய்வதால் ஆயிரக்கணக்கான மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற வேண்டியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக