
மருத்துவர் மயிலேறு பெருமாள் தலைமையில் நடைபெறும் இறுதி நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் செ.கஜேந்திரன்,பத்மினி சிதம்பரநாதன் உட்பட்டவர்களும் பங்குகொண்டிருக்கின்றனர்.
நிகழ்வில் நினைவுரைகளை தமிழ் தேசிய ஆதரவாளர்களான பழநெடுமாறன் வை.கோ உட்பட்டவர்கள் தொலைபேசி ஊடாக நிகழ்த்தியிருக்கின்றனர்.
வடமராட்சியின் அனைத்து வீதிகளிலும் செல்வோர் அனைவரும் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் இந் நடவடிக்கையில் இராணுவத்தினரும் பொலிஸாரும் ஈடுபட்டிருக்கின்றனர்.
நிகழ்வு நடைபெறும் இடத்திற்குச் செல்வோரை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் சோதனைகளுக்கு உட்படு்த்தியே அனுமதிப்பதாக நிகழ்வில் பங்குகொண்டிருந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக