20 பிப்ரவரி 2011

அன்னையின் நிகழ்வுகளை சிங்களப்படை கண்காணிக்கிறது!

தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் தாயார் ஈழத்தாய் பார்வதி அம்மாளின் மரண அஞ்சலியில் இடம்பெறுகின்ற ஒவ்வொரு விடயத்தையும் புலனாய்வுப் பிரிவினர் மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர்.
யாழ். வடமராட்சியில் வல்வெட்டித்துறை பிரதேசம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
சிவில் உடையிலும், சீருடையிலும் இராணுவத்தினர் கண்காணிப்புக் கடமைகளில் ஈடுபட்டு இருக்கின்றனர்.
வே.பிரபாகரன் என்கிற சொல்லை பயன்படுத்துகின்றமையை இராணுவத்தினர் முழுமையாக தடை செய்து உள்ளார்கள்.
அத்துடன் வே.பிரபாகரனின் தாயார் காலமானார் என்கிற தலைப்பில் வீதிகளில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை பொதுமக்களைக் கொண்டு அகற்றியும் இருக்கின்றனர்.
இதே நேரம் பார்வதி அம்மாளின் புகழுடல் மக்கள் அஞ்சலிக்காக மாலை 5.00 மணி முதல் வைக்கப்பட்டு உள்ளது.
நாளை மறுதினம் மாலை 4.00 மணிக்கு வல்வெட்டிதுறை ஊரணி பொதுமயானத்தில் இறுதி வணக்க நிகழ்வுகள் இடம்பெற உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக