11 பிப்ரவரி 2011

டக்ளஸ் சரணடைந்ததால் பிடிவிறாந்து வாபஸ்.

பாரம்பரிய சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடிவிறாந்தை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வாபஸ் பெற்றது.
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை, 2004 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவரின் கொள்ளுப்பிட்டி அலுவலகத்தில் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலை குண்டுதாரியொருவர் கொலை செய்ய முயற்சித்தமை தொடர்பான வழக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார்.
இவ்வழக்கு விசாரணையில் அமைச்சர் டக்ளஸ் நீதிமன்றில் ஆஜராகத் தவறியதையடுத்து அவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றினால் கடந்த 7 ஆம் திகதி பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று சட்டத்தரணிகள் எம்.கே.பி. சந்திரலால் மற்றும் அநுருத்த பண்டார மாகம்மன ஆகியோருக்கூடாக நீதிமன்றில் சரணடைந்தார். அமைச்சருக்கு எதிரான பிடிவிறாந்தை வாபஸ் பெறுமாறு அவரின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தை கோரினர்.
அதையடுத்து, நீதிபதி டபிள்யூ.எம்..பி.பீ. வராவேவ மேற்படி பிடிவிறாந்தை வாபஸ் பெற்றதுடன் அமைச்சர் தேவானந்தாவை எதிர்வரும் மே 26 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக