26 பிப்ரவரி 2011

தமிழ் மாணவர்களுக்கு சிங்களப்படை ஆயுதப் பயிற்சி!

சிறிலங்கா விமானப்படை தியத்தலாவ முகாமில் மாணவ கடெற் பயிலுனர்களுக்கு ஆயுதப் போர்ப்பயிற்சிகளையும் வழங்கியுள்ளது. இந்தப் பயிற்சி முகாமுக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர்களும், மட்டக்களப்பில் இருந்து முஸ்லிம் கல்லூரி மாணவர்களும் சிறிலங்கா விமானப்படையினரால் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.
சுமார் 1000 வரையான பாடசாலை மாணவர்கள் 40 பிளட்டூன்களாகப் பிரிக்கப்பட்டு இந்தப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு வாரகாலம் தியத்தலாவ விமானப்படைத் தளத்தில் வைத்து இவர்களுக்கு ரி-56 துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கையாளும் போர்ப்பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது. சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் ஆலோசனையின் பேரில் தேசிய கடெற் படையின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் காமினி ஜெயசுந்தர இந்தப் பயிற்சிக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்.
இந்தப் பயிற்சியின் முடிவில் இடம்பெற்ற நிகழ்வில் சிறிலங்கா விமானப்படையின் நிர்வாகப் பிரிவு பணிப்பாளர் எயர் வைஸ் மார்சல் றோகித ரணசிங்க கலந்து கொண்டு சிறந்த பயிற்சியாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார். சிறிலங்கா அரசாங்கம் மீசை முளைக்காத பாடசாலை மாணவர்களுக்கு ஆயுதப் போர்ப் பயிற்சிகளை வழங்கியுள்ளது. சிறார்களை படையில் சேர்க்கின்ற முயற்சியா என்ற பலத்த சந்தேகத்தைக ஏற்ப்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக