பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதுவராக சென்னை துணைத் தூதுவராக கடமையாற்றிய கே.பத்மநாதன் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸினால் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய தூதுவர் பத்மநாதன் ஒரு வாரத்திற்கு முன்னரே தனது தூதரக பணிகளை ஆரம்பித்துள்ளதாக கொ ழும்பு வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சின் எவ்வித ஊடக அறிவித்தலுமின்றி மிகவும் இரகசியமான முறையில் பத்மநாதனின் நியமனத்தை மேற்கொண்டுள்ளதையிட்டு கொழும்பு ஊடகங்கள் சந்தேகம் தெரிவித்துள்ளன.
பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதுவராக கடற்படைத் தளபதி வசந்த கன்னரங்கொட நியமிக்கப்படவுள்ளதாக கடந்த வருடம் செய்திகள் வெளியாகியிருந்த போதும் படைத்துறை அதிகாரிகளுக்கு எதிராக போர்க் குற்ற வழக்குகளைத் தாக்கல் செய்வதில் பிரித்தானியத் தமிழர் அமைப்புக்கள் தீவிரம் காட்டிவந்த காரணத்தாலேயே இவ் விடயத்தில் பின்வாங்கியுள்ளதாக நம்பப்படுகிறது.
பிரித்தானிய தமிழர் அமைப்புக்களின் அழுத்தங்கள் காரணமாகவே இவ் விடயத்தில் இலங்கை அரசாங்கம் பின்வாங்கிவிட்டதாகவும் எதிர்கட்சிகளும் புலம் பெயர் தமிழர் அமைப்புக்களும் மேற்கொள்ளக்கூடிய பிரசாரச் செயற்பாடுகளுக்கு முகம் கொடுப்பதை தவிர்ப்பதற்காகவே அரசாங்கம் பத்மநாதனின் நியமனத்தை இரகசியமான முறையில் மேற்கொண்டுள்ளதாக கொழும்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக