08 பிப்ரவரி 2011

கிளிநொச்சியில் வீடுகள் நீரில் மூழ்கின!

கிளிநொச்சி மாவட்டத்தில் கனத்தமழை, வெள்ளம் மற்றும் இரணைமடுகுளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதினால் கண்டாவளை, கரைச்சி உதவி அரச அதிபர் பிரிவுகளில் 2780 வீடுகள் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளன.
3781 குடும்பங்களைச் சேர்ந்த 14827 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென கிளிநொச்சி மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதம அமைப்பாளர் திருமதி கீதாஞ்சலி நகுலேஸ்வரன் வடமாகாண ஆளுநருக்கு அனுப்பிவைத்துள்ள அவசர கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இடம்பெயர்ந்த மக்களுக்கு அவசர உதவிகள் தேவைப்படுகின்றன எனவும் குறிப்பிட்டுள்ளார். அதேநேரத்தில் பரந்தனில் 371 குடும்பம் 1676 பேர், குமரபுரத்தில் 131 குடும்பம் 785 பேர், 242 குடும்பங்களைச் சேர்ந்த 1272 பேர், உமையாள்புரத்திலும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என கிளிநொச்சி மாவட்ட அனர்த்த நிவாரண நிலையம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக