02 பிப்ரவரி 2011

தமிழக ராஜா கைது,கருணாநிதி மருத்துவமனையில் தஞ்சம்!

இந்தியாவின் முன்னாள் அமைச்சர் ஆர்.ராஜா கைது செய்யப்பட்டுள்ளார்.ஸ்பெக்றம் ஊழல் தொடர்பில் சீ.பீ.ஐ அதிகாரிகளினால் கைதான முன்னாள் அமைச்சர் ராஜாவுடன் அவரது சகோதரர் கலியப் பெருமாள், பிரத்தியேக செயலாளர் ஆர்.கே.சன்டோளியா, முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சின் செயலாளர் தித்தார்த் பெகுரியா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தமிழகத்திலும் பலர் கைதாகலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நாட்டுக்கு ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுத்தியதாக மத்திய கணக்கு தணிக்கைக்குழு அறிக்கை அளித்தது. இதனை தொடர்ந்து எழுந்த எதிர்ப்பு அலைகளால் ராஜா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ராஜா வகித்து வந்த பதவி கபில் சிபலிடம் ஒப்படைக்கப்பட்டது.
ராஜாவின் வீடுகள் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி தேடுதல்களை மேற்கொண்டனர். பின்னர் ராஜாவிடம் சி.பி.ஐ., தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் ராஜா சி.பி.ஐ.., விசாரணைக்கு ஒத்துழைப்பு நல்கவில்லை என்பது சி.பி.ஐ., தரப்பு வாதம். இந்நிலையில் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார்
இதேவேளை வழமைபோல் பாரிய சிக்கல்கள் வரும் போது வைத்தியசாலையில் போய் அனுமதியாகும் முதல்வர் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக