கடுவல - பியகம பிரதேசங்களுக்கு இடையில் நேற்று முன்தினம் இரவு வானில் தென்பட்ட மர்மான ஒளி தொடர்பான நவகமுவ காவற்துறையினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்றின் விமானி ஒருவர் இந்த மர்மான ஒளியை முதலில் அவதானித்துள்ளார். மிகவும் பிரகாசமான ஒளி தனது விமானத்தில் பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதன் பின்னர், சிறிது நேரத்தில் வானில் தென்பட்ட இந்த மர்ம ஒளியை முல்லேரியா பிரதேசத்தை சேர்ந்த இருவர் அவதானித்துள்ளனர். இந்த ஒளி மிகவும் வேகமாக பயணித்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக