07 பிப்ரவரி 2011

ஒட்டுக்குழுக்களினால் ஈழம் ஈ நியூஸ் இணையம் முடக்கம்!

சிறீலங்கா அரசுடன் இணைந்து இயங்கும் ஒட்டுக்குழுக்களின் தாக்குதலில் ஈழம் ஈ நியூஸ் இணையத்தளம் நேற்று (06) செயலிழந்துள்ளதாக ஈழம் ஈ நியூஸ் நிர்வாகத்தினர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் விடுத்துள்ள செய்திக் குறிப்பு வருமாறு:
இன்று ஞாயிற்றுக்கிழமை (06) காலை பிரித்தானியாவை தளமாகக் கொண்ட ஈழம் ஈ நியூஸ் தளக்கட்டுப்பாட்டாளருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட சிறீலங்கா அரசுடன் இணைந்து இயங்கும் நபர்கள் கொலை அச்சுறுத்தலை விடுத்திருந்த நிலையில் ஈழம் ஈ நியூஸ் இணையத்தளமும் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.
அற்ப சலுகைகளுக்காக சிறீலங்கா அரசின் கைக்கூலிகளாக மாறியுள்ள சிலரின் நடவடிக்கை காரணமாக எமது தளம் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இது தொடர்பில் இணையத்தளத்தின் கட்டுப்பாட்டு நிறுவனமான 1 to 1 என்ற நிறுவனத்திடம் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரித்தானியா காவல்துறையினரிடம் முறைப்பாடுகளை மேற்கொள்ளுமாறு 1 to 1 நிறுவனம் கேட்டுக்கொண்டதை தொடர்ந்து பிரித்தானியா காவல்துறையினரிடமும் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இக்கட்டான காலத்தின் எமக்கு உதவிகளை வழங்கியவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன், தேசியத்தின் தகவல்களை தாங்கி ஈழம் ஈ நியூஸ் இணையத்தளம் மீண்டும் மக்கள் முன் புதுப்பொலிவுடன் வரும் என தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றி

ஈழம் ஈ நியூஸ் நிர்வாகத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக