
இன்று மாலை சம்பவ இடத்திற்கு சென்ற மட்டக்களப்பு பதில் நீதிபதி வி.எம்.சியாம் விசாரணைகளை மேற்கொண்டார்.
இதுவரை குறித்த சடலம் அடையாளம் காணப்படவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஏறாவூரில்……
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சந்திவெளியில் ஆடு மேய்ப்பதற்காக சென்ற பெண்ணொருவர் உருக்குலைந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஜின்னா வீதி பாலையடித்தோனாவிலிலுள்ள மதகு ஒன்றிற்கு அருகிலுள்ள ஏரிக்கரையோரத்தில் இவரது சடலம் மீட்கப்பட்டது.
பாலையடித்தோனா சந்திவெளியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான ரூபாசினி ஜெயக்கணேஷ் (வயது 18) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
இவர் கடந்த வியாழக்கிழமை வழக்கம்போல தனது ஆடுகளை மேய்ப்பதற்காக அருகிலுள்ள காட்டுப் பகுதிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.
ஏறாவூர் பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த பெண்ணின் கணவன் தொழில் நிமித்தம் அரேபிய நாடொன்றுக்கு சென்றிருந்த நிலையில், தனது மகளுடன் அவர் வசித்து வந்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக