24 நவம்பர் 2010

இலங்கையின் அணுகுமுறைகளுக்கு பான் கீ மூன் எதிர்ப்பு!

மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்து இலங்கை அரசாங்கம் பின்பற்றி வரும் கொள்கைகளுக்கு ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கடைபிடிக்கும் சில கொள்கைகள் திருப்தி அடையக் கூடிய வகையில் அமையப் பெறவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆயுதப் போராட்டங்களின் போது பொதுமக்களை பாதுகாப்பது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயங்களை அவர் தெரிவித்துள்ளார்.
மனிதாபிமான அடிப்படையில் தொண்டுகளை மேற்கொண்டு வரும் நிறுவனங்களும், தன்னார்வ தொண்டர்களும் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனிதாபிமான தொண்டுகளை மேற்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் கூடுதலான ஆதரவினை வழங்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
2010ம் ஆண்டின் முதல் அரையாண்டுப் பகுதியில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மனிதாபிமான தொண்டுகளை மேற்கொள்வது தொடர்பான கட்டுப்பாடுகளை அரசாங்கம் ஓரளவு தளர்த்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இடம்பெயர் முகாம்களில் பணியர்றுவதற்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிபந்தனைகளின் மூலம் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில வகையான தொண்டுகளை மேற்கொள்வதற்கு மிகவும் வரையறுக்கப்பட்ட காலப்பகுதியே வழங்கப்படுவதாகவும் இது போதுமானதல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக