
பிரிட்டனின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் சிங்கள சங்கத்தின் அழைப்பின் பேரில் மகிந்த பிரிட்டனுக்கு விஜயம் செய்யவுள் ளார்.ஜனாதிபதியின் பிரிட்டன் விஜயத்தின் போது அவரை சிரமத்தில் ஆழ்த்தும் வகையில் சில தமிழ் புலம்பெயர் செயற்பாட்டாளர்களும் சில சிங்களவர்களும் முயற்சி மேற்கொண்டு வருவதாக பத்திரிகை சுட் டிக்காட்டியுள்ளது.
இன ஒடுக்குமுறை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்து புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளதாகவும் இதில் ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஆகியோரின் படங்கள் உள்ள டக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரியா, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட இரா ணுவத்தைச் சேர்ந்த 182 உயர் அதிகாரிகளின் படங்களும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இந்த நிலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கைது செய்யப்பட்டால் அவரை விடுவிக்க பிரிட்டன் அரசால் ஒன்றும் செய்ய முடியாது என அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக