27 நவம்பர் 2010

வடக்கில் சிங்களவர் குடியேறுவதில் தவறில்லை என்கிறார் மகிந்த!

கொழும்பில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஆதிக்கம் செலுத்த முடியுமானால் வடக்கில் சிங்கள மக்கள் குடியேறுவதை தவறு என எப்படிக் கூறமுடியும் என தமிழ்க் கட்சிகளின் அரங்கத்திடம் மகிந்த ராஜபக்ச கேள்வி எழுப்பி உள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை நண்பகல் தமிழ்க்கட்சிகளின் அரங்கம் ஜனாதிபதியைச் சந்தித்தபோதே ஜனாதிபதி இவ்வாறு கேள்வி எழுப்பியதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் பங்குபற்றிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி என்.குமரகுருபரன் தெரிவித்தார். இச் சந்திப்புத் தொடர்பாக மேலும் கூறுகையில்,
வடக்கில் இராணுவக் குடியிருப்புக்கள் அமைக்கப்படுவது குறித்து தமிழ்த் தேசிய விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் எம்.கே. சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டினார். அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, கொழும்பில் தமிழ் முஸ்லிம் மக்கள் ஆதிக்கம் செலுத்த முடியும் என்றால் வடக்கில் சிங்கள மக்கள் குடியேறுவதை எப்படித் தவறு எனக் கூறமுடியும் என ஆக்ரோஷமாக கேள்வி எழுப்பினார்.அத்துடன் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்ற முடியாது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஆனால் சிறு குற்றங்களுக்காக சிறைச்சாலைகளிலுள்ள தமிழ்க் கைதிகள் தொடர்பான வழக்குகளை துரிதப்படுத்தி அவர்களின் விரைவான விடுதலைக்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபருக்கு தான் உத்தரவிடுவதாக தமிழ்க் கட்சிகளின் அரங்கத்திற்கு ஜனாதிபதி வாக்குறுதி அளித்தார் என்றார்.

1 கருத்து:

  1. தமிழர்கள் என்றுமே தெற்கில் ஆதிக்கம் செலுத்தவில்லை. தமது உழைப்பை உதிரத்தை நாட்டின் முன்னேற்றத்திற்கு அர்ப்பணிததார்கள். அவர்கள் சிஙகளக் காவலி கொலைவெறியரைப் போன்று அடாவடித்தனத்துடன் குடியேறவில்லை. இன்று இலங்கையி இந்தளவிற்காவது முன்னேற்றம் கண்டது தமிழர் உழைப்பினால். அவர்களின் நிதிகளினால். அத்துடன் பிற்காலத்தில் கொழும்பிற்கு வந்ததும் சிஙகள இனவெறி அரசின் கட்டாக்காலி இராணுவத்தின் ஆக்கிரமிப்பினால். சிஙகள அரசு இவர்களுக்கு தமது அரச காணிகளை தாரைவார்த்துக் கொடுக்க வில்லை. இவர்களின் உழைப்பினாலே வாங்கி குடியிருப்புகளில் தான் தெற்குத் தமிழர்கள்வாழ்கிறார்கள் என்பதனையும மறந்துவிட்டு இந்த கொலைவெறியன் கூச்சலிடுகின்றான். அதைக் கேட்டுக் கொண்டு இந்த வெட்கம் கெட்ட தமிழ் பா.உ களிசடைகள்....!

    பதிலளிநீக்கு