23 நவம்பர் 2010

புலிகள் மீதான தடைக்கெதிராக மேல் நீதிமன்றில் வழக்கு!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான மத்திய அரசின் தடை நீடிப்பு சரியானது என்று பிரகடனப்படுத்தி டில்லி மேல்நீதிமன்ற நீதிபதி விக்ரம ஜித் சென் தலைமையிலான விசேட நீதிமன்றத்தால் வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு செல்லுபடி அற்றது என அறிவிக்க வேண்டும் என்று கோரி சென்னை மேல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
சிறைக் கைதிகளின் உரிமைகளுக்கான பேரவை என்கிற அமைப்பு சட்டத்தரணி பி.புகழேந்தியின் நெறிப்படுத்தலில் இவ்வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிப்பை கடந்த மே 14 ஆம் திகதி மத்திய அரசு அறிவித்து இருந்தது. இத்தடை நீடிப்பு சட்ட ரீதியானதா? இல்லையா? என்று விசாரித்து-ஆராய்ந்து -தீர்ப்பு வழங்கவே விசேட ஆயம் நியமிக்கப்பட்டது.
ஆனால் விசேட ஆயம் புலிகள் இயக்கம் மீதான மத்திய அரசின் தடை நீடிப்பு சட்ட ரீதியானது-சரியானது-செல்லுபடியானது என்கிற முடிவுக்கு வந்ததற்கு பிரதான காரணமாக நாடு கடந்த தமிழீழ அரசின் உருவாக்கத்தை குறிப்பிட்டுக் காட்டி இருந்தது.
ஆனால் நாடு கடந்த அரசு கடந்த மே மாதம் 17 ஆம் திகதிதான் அமைக்கப்பட்டு இருக்கின்றது. ஆனால் விசேட ஆயம் இவ்விடயத்தை கருத்தில் கொள்ளாமல் தவறான தீர்ப்பு வழங்கி விட்டது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 கருத்து:

  1. எமக்காய் எம் இயக்கத்திற்காய் போராடுபவர்களுக்கு ஈழ மக்கள் சார்பாக நன்றிகள்.

    பதிலளிநீக்கு