30 நவம்பர் 2010

போர்க்குற்றவாளி மகிந்தவே திரும்பி போ"கீத்றூ விமான நிலையத்தில் மக்கள் கோஷம்!


போர்க்குற்றவாளியும், தமிழின அழிப்பின் சூத்திரதாரியுமான மஹிந்த ராஜபக்ஷவின் பிரித்தானிய வருகையை எதிர்த்து லண்டன் கீத்றூ விமானநிலையத்தில் நேற்று இரவு ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் கூடி எதிர்ப்பை தெரிவிக்கும் முகமாக ஆர்ப்பாட்டம் நடாத்தியுள்ளனர்.
நேற்று (29-11-2010) இரவு 8:00 மணிமுதல் லண்டன் கீத்றூ விமானநிலையத்துக்குள் வர ஆரம்பித்த தமிழ் மக்கள் 10:00 மணியளவில் உரத்த குரலில் தமது எதிர்ப்பை தெரிவித்து போராட்டம் நடாத்தினர். ஆயிரத்துக்கும் அதிகமாக அங்கு கூடிய தமிழ்மக்களில் பலர் "ஸ்ரொப் ஜெனசைட்" என குறிக்கப்பட்ட மேலங்கிகளை அணிந்தவாறும் படுகொலை செய்யப்பட்ட மக்களின் படங்களை கைகளில் ஏந்தியவாறும் உரத்த குரலில் தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.
தமிழர்களின் இந்த திடீர்போராட்டத்தால் அங்கு கூடிய அதிகளவான காவல்துறையினருக்கு மத்தியிலும் அதிகளவானோர் தமது கரங்களில் தமிழீழ தேசியக் கொடியினை ஏந்தியவாறு
"போர்க்குற்றவாளி மஹிந்தவே திரும்பிப் போ"
"சிறீலங்கா ஜனாதிபதி பயங்கரவாதி"
"இனப்படுகொலை செய்த அரக்கனே திரும்பிப் போ"
"சிறீலங்கா ஜனாதிபதி போர்க்குற்றவாளி"
போன்ற கோசங்களை உரத்த குரலில் எழுப்பி விமானநிலையமே அதிரும் வண்ணம் தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.
அனுமதியற்ற போராட்டமாக இருந்த போதும், அங்கு தேசியக்கொடிகள் பிடிக்கப்பட்டு உரத்தகுரலில் எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றபோதும் அங்கு கூடிய பிரித்தானிய காவல்துறையினர் எந்தவித இடையூறும் கொடுக்காததும், அதேபோல் போராட்டம் முடிவடையும் போது தமிழர்கள் பலர் காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்துச் சென்றதோடு அங்கு எதுவித அசம்பாவிதங்களோ, அன்றி கைதுகளோ நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்பாடு செய்யப்படாத இந்த திடீர் போராட்டத்தில் தமிழ் இளையோர் அமைப்பு, பிரித்தானிய தமிழர் பேரவை உறுப்பினர்கள், நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதிகள், மற்றும் பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழர்கள் அங்குகூடி போராட்டம் நடாத்தியதால் மகிந்த ராஜபக்ஷ மட்டுமன்றி அந்த விமானத்தில் வந்த அதிகளவான சிங்களவர்களையும் காவல்துறையினர் வேறு வழிகளினூடாக வெளியேற்றியிருந்தனர்.
அச்சமடைந்த மகிந்தவை விமானம் தரை இறங்கியதும் விமானத்திற்கு அருகில் சென்ற நான்கு காவல்துறையினரின் வாகனங்கள் பாதுகாப்பு கொடுக்க ஒரு வாகனம் அவரை ஏற்றிக்கொண்டு வேறுவழியால் சென்று ஹட்ரன் குறஸ் நிலக்கீழ் தொடரூந்து நிலைய வழியாக ஏ312 வீதியூடாக சென்றல் லண்டனை நோக்கி விரந்து சென்றுள்ளது. வேறுவழிகளால் செல்லும் வாய்ப்பே அதிகமாக இருக்கும் என எதிர்பார்த்து கண்காணிப்பில் பல இடங்களிலும் நின்ற தமிழர்களால் இச்செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது மட்டுமன்றி எதிர்வரும் 2-ஆம் திகதி ஒக்ஸ்பேட் பல்கலைக் கழகத்திலும் மகிந்த உரையாற்றவுள்ளதால் இதை விட அதிகளவான தமிழர்கள் அங்கு கூடி தமது எதிர்ப்பை தெரிவிப்பார்கள் என எதிர்வுகூறப்பட்டுள்ளதும் இங்கு சுட்டிக்காட்டதக்கது.
உடனடியாக செய்யவேண்டிய வேலையாக கீழுள்ள லிங்கை அழுத்தி அதனூடாக உங்கள் முறைப்பாட்டை 300 சொற்களுக்கு அதிகமாக இல்லாமல் இலகுவாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சிற்கு அனுப்புங்கள்.
http://www.fco.gov.uk/en/feedback

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக