01 நவம்பர் 2010

பிரித்தானியா வருவதா இல்லையா ? மகிந்த பெரும் குழப்பத்தில்!

நவம்பர் மாதாம் 7ம் திகதி லண்டனில் உள்ள ஆக்ஸ்பேட் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றில் மகிந்த கலந்துகொள்ளவேண்டி உள்ளது. ஆனால் சமீபத்தில் பிரித்தானியா வந்து மாநாடு ஒன்றை நடத்த முயன்ற ஜி.எல் பீரிசுக்கும் தமிழ் மக்கள் கொடுத்த பேரிடியை, மகிந்த எண்ணிப்பார்த்துள்ளார். அதனால் பிரித்தானியா வருவதா இல்லை, இன் நிகழ்வுகளைப் புறக்கணிப்பதா என்று ஆலோசனை ஒன்றை நடத்திவருவதாக விடையம் அறிந்த வட்டாரங்களூடாகச் செய்திகள் கசிந்துள்ளது.
அதாவது ஜி.எல் பீரிஸ் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிரித்தானியா வந்து மாநாடு ஒன்றை நடத்தியிருந்தார். இம் மாநாடு நடைபெற்ற கட்டிடத்திற்கு முன்பாக நூற்றுக்கணக்கான தமிழர்கள் திரண்டு பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியதோடு மட்டுமல்லாது, அன் நாளில் போர்குற்ற புகைப்படங்களும், உலகத் தமிழர் பேரவையால் வெளியிடப்பட்டது. இதனை பி.பி.சி யின் சிங்கள மற்றும் தமிழ் சேவைகள் மட்டுமல்லாது, பல ஊடங்கள் பிரசுரித்தது. இதனால் ஜி.எல் பீரிசின் விஜயத்திலும் அவர் மேற்கொள்ளவிருந்த நகர்வுகளிலும் மண் விழுந்தது யாவரும் அறிந்தே !
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதை முடித்துக்கொண்டு பிரித்தானியா வருவதா இல்லை அந்த நிகழ்வை புறக்கணிப்பதா என்று அவர் ஆலோசிக்க பல காரணிகள் உள்ளது. குறிப்பாக மகிந்த பிரித்தானியா வரவிருப்பது இரகசியமாக வைக்கப்பட்டிருந்தாம், அத்தோடு வருவதற்கு சுமார் 2 தினங்களுக்கு முன்னரே அவர் பயணம் குறித்து ஊடகங்களுக்கு அறிவிக்கப்பட இருந்ததாகவும், ஆனால் இவ் விடையம் தற்போது பல ஊடங்களிலும் எதிர்பாத்ததை விட முன்னராக வெளியாகிவிட்டது.
இதனால் லண்டனில் உள்ள தமிழ் அமைப்புகள், குறிப்பாக பிரித்தானிய தமிழர் பேரவை இது குறித்து தனது கவனத்தை திருப்பியுள்ளது. மகிந்த லண்டன் வந்தால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. அத்தோடு அன் நாளில் மேலும் ஏதாவது போர்குற்ற படங்கள் வெளியானால், மேலும் சங்கடத்துக்கு தான் உள்ளாகலாம் என மகிந்த நினைக்கிறார் போலும் ! அவர் பிரித்தானியா வந்தாலும், தமிழர்கள் தமது எதிர்ப்பைக் காட்ட தயங்கப்போவது இல்லை என்பது கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் மூலம் வெட்டவெளிச்சமாகிறது.
எது எவ்வாறு இருப்பினும் மகிந்த பிரித்தானியா வந்தால், பாரியளவில் எதிர்ப்பு ஆர்பாட்டம் ஒன்றை நடாத்த, பிரித்தானிய தமிழர் பேரவை முடிவெடுத்துள்ளதாக, அதன் செயல்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். மகிந்த பிரித்தனியா வரும் பட்சத்தில், அவரைக் கைதுசெய்யக் கோரி மக்கள் பாரியளவில் ஆர்பாட்டம் ஒன்றை நடாத்த இருக்கின்றனர், எனவே நாம் அனைவரும் ஒன்றுதிரள்வோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக