முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி மீதான படுகொலை வழக்கிலிருந்து விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன், அதன் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் ஆகியோரின் பெயர்கள் விடுவிக்கப்பட்டுள்ளபோதிலும் ராஜீவ் காந்தி கொலை வழக்கு இன்னமும் முடிபுக்கு வந்துவிடவில்லை என இராஜதந்திர வட்டாரங்களை ஆதாரம் காட்டி கொழும்பு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியச் சட்டத்தின்படி சட்டரீதியான செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தெரிவித்த அந்த வட்டாரங்கள் சட்டரீதியாக முன்னெடுக்கப்படவேண்டிய விடயங்கள் இன்னமும் பல உள்ளன எனவும் சுட்டிக்காட்டின.இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு தமிழகத்தில் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ளச் சென்றிருந்த போதுமனித வெடிகுண்டு ஒன்றினால் கொல்லப்பட்டார்.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோர் முதலாம், இரண்டாம் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தார்கள். தற்போது தலைவர் பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்கள் மீளப் பெறப்பட்டுள்ள போதிலும் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கு விஷேட நீதிமன்றத்தினால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக