24 நவம்பர் 2010

ஐரோப்பா மாவீரர் நாள் விபரங்கள்.

ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் மாவீரர் நாள் நிகழ்வுகளின் விபரங்களில் எமக்கு கிடைத்தவற்றை இங்கு தருகிறோம்.
எமது மாவீரர்களின் கல்லறைகளை சிதைக்கலாம், அவர்களின் துயிலுமில்லங்களை தரைமட்டமாக்கலாம் ஆனால் அவர்களின் ஆத்மாவில் இருந்து எழும்பிய அந்த விடுதலை வெறி ஒவ்வொரு தமிழனின் ரத்தத்தில் உறைந்துள்ளது என்பதை உலகிற்கு உணர்த்துவோம்.
சத்திய இலட்சியத்திற்காக மரணித்த எமது மாவீர செல்வங்களை நவம்பர் 27 இல் நினைவு கொள்வதோடு மட்டும் நின்று விடாமல் அந்த வீரவேங்கைகளின் கனவை நிறைவாக்க இறுதி வரை நாம் தொடர்ந்து போராடுவோம் என உறுதி எடுத்துக் கொள்ளுவோம்.
இம்முறை மாவீரர் நாள் சிங்கள அரசிற்கு மட்டுமன்றி தமிழ் மக்களை ஏமாற்றும் அனைவருக்கும் ஒரு பாடமாக அமையட்டும். எமக்குள் என்ன கருத்து வேறுபாடு இருப்பினும் மாவீரர்கள் எனும் ஒரு சொல்லில் ஒன்றுசேருவோம்.
பணமோ! பொருளோ தேவையில்லை. மலர் கொண்டு மட்டும் மாவீரர்களை வணங்கினால் போதும். மாவீரர்களுக்காகவும் அவர்கள் செய்த தியாகத்திற்காகவும் ஏதேனும் செய்ய நினைத்தால் அதை தாயகத்தில் நேரடியாகவே ஊரில் உள்ள உங்கள் உறவுகள் மூலம் அங்குள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்யுங்கள். அதுவே மாவீரர்களுக்கு நீங்கள் செய்யும் உண்மையான காணிக்கையாகும். இவ்வாறு செய்வதால் உங்கள் உதவிகள் இடைத் தரகர்களிடம் தங்கிடாது முழுமையாக அவர்களை சென்றடைவதோடு உங்களுக்கும் திருப்தி உண்டாகும்.
பணங்களை தேவையில்லாது செலவளிக்காது அதை அவதியுறும் எம் உறவுகளுக்காக பயன்படுத்துவோம். மாவீரர் நாளில் ஒன்றிணையும் நாம் அனைவரும் தமிழீழம் மீட்கும் வரையாவது ஒற்றுமையாக இணைந்திருந்து அதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்போம்.

1 கருத்து:

  1. அரக்கர்கள் இடித்தழித்தது கலலரையை. எனில் எம் மனதினில் கட்டிவைத்த கல்லரையை இடித்திடல் முடியுமா? பெரு எழுச்சியுடன் தமிழர் வாழும் தரணியெங்கும கொண்டாடுவோம். எதிரிகளின் மனவுறுதியை அகங்காரத்தை உடைத்தெறிவோம். மாவீரரே எம் தெய்வங்களே உங்களுக்கு வீர வணக்கங்கள்.

    பதிலளிநீக்கு