தற்போது ஐ.நாவிலேயே போர்க்குற்றவாளி இருக்கிறார், மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா தான் இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற பல படுகொலைகளுக்கு பொறுப்பானவர் என கருதப்படுபவர், சிறீலங்காவை பிரதிநிதித்துவப்படுத்துபவரும் அவர் தான். அவரை நேர்ணால் மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் சபை முயற்சி செய்ததா? என ஐக்கிய நாடுகள் சபையின் ஊடக அமைப்பான இன்னசிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது
ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறீலங்காவின் பிரதி பிரதிநிதியாக நியமனம் பெற்று வந்துள்ள மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா கடந்த வருடம் இடம்பெற்ற போரில் மேற்கொள்ளப்பட்ட பல போர்க்குற்றங்களுக்கு பொறுப்பானவர்.
ஐக்கிய நாடுகள் சபையின் பிரதம அதிகாரிகளில் ஒருவரான இந்தியாவை சேர்ந்த நம்பியார் என்பவருடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுக்களின் பின்னர் வெள்ளைக்கொடிகளுடன் சரணடைந்தவர்களை சிறீலங்கா அரசு படுகொலை செய்ததில் சில்வாவுக்கு அதிக பங்கு உண்டு என தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது எமது கேள்வி என்னவெனில் சிறீலங்காவில் இடம்பெற்ற சம்பவங்கள் உண்மையானவை எனில் அதில் தொடர்புள்ளவர்களை ஐ.நா செயலாளர் நாயகம் ஏற்றுக்கொள்ளப்போகிறாரா? இது அவர்களுக்கு சுயமாக வழங்கப்படும் அங்கீகாரம் போன்றது.
அவ்வாறானால், சூடான் நாடு அதன் பிரதிநிதியாக அஹமட் ஹரோன் என்பவரை ஐ.நாவுக்கு அனுப்பினால், அதனை ஐ.நா ஏற்றுக்கொள்ளுமா?
ஆதராங்களை எதிர்வரும் 15 ஆம் நாளுக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு ஐ.நாவின் ஆலோசனைக்குழு கோரிக்கை விடுத்துள்ளபோதும், அது சிறீலங்கா செல்வது குறித்து எந்த முடிவுகளும் மேற்கொள்ளப்படவில்லை.
எனினும் ஐ.நா அமைத்துள்ள ஆலோசனைக்குழுவின் தலைவர் கடந்த வாரம் முழுவதும் தென்கொரியாவில் இருந்துள்ளார். இந்த நிலையில் அவரால் சிறீலங்கா விடயங்களில் அதிக காலத்தை செலவிட முடியுமான என நாம் கேள்வி எழுப்பியபோது, அவர்கள் அதற்கான காலத்தை செலவிடுவார்கள் என ஐ.நாவின் பேச்சாளர் ஹக் தெரிவித்துள்ளார்.
நாளுக்கு நாள் மக்களால் சமர்ப்பிக்கப்படும் ஆதாரங்கள் கருத்தில் கொள்ளப்படுமான என்ற கேள்விக்கு, அது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அறிக்கை பொதுமக்களுக்கு வெளியிடப்படுமா என்பது தொடர்பில் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு, அது தொடர்பில் பான் கீ மூன் முடிவுகளை மேற்கொள்வார் என ஹக் மேலும் தெரிவித்துள்ளார்.
தற்போது ஐ.நாவிலேயே போர்க்குற்றவாளி இருக்கிறார், அவர் தான் இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற பல படுகொலைகளுக்கு பொறுப்பானவர் என கருதப்படுபவர், சிறீலங்காவை பிரதிநிதித்துவப்படுத்துபவரும் அவர் தான். அவரை நேர்ணால் மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் சபை முயற்சி செய்ததா? என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக