தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முக்கியஸ்தர் என ஒருவர் ஜேர்மனியின் Duesseldorf விமான நிலையத்தில் வைத்து கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
அகிலன் என்கிற இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஆவார். ஜேர்மனிய பிரஜை ஆன இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக நிதி சேகரித்தார் என்கிற குற்றச்சாட்டின் பேரில் அந்நாட்டு அரசினால் தேடப்பட்டு வந்தவர்.
2005 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை ஜேர்மனியில் புலிகள் இயக்க முக்கியஸ்தராக இவர் செயற்பட்டு வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவர் மடகஸ்கார் நாட்டுக்கு தப்பிச் சென்று இருந்தார் எனவும்,மடகஸ்கார் நாடு இவரை ஜேர்மனியிடம் திரும்ப கையளித்து உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக