தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப தமிழ்ச் செல்வனுக்குச் சிலை அமைக்கும் விவகாரத்தில் இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கை குறித்துப் பரிசீலிப்பதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையிலும், பிரான்ஸிலும் தடை செய்யப்பட்ட ஓர் இயக்கத்தின் உறுப்பினருக்குச் சிலைநிறுவ அனுமதிக்கக் கூடாது என்று பிரான்ஸ் அரசை இலங்கை அரசாங்கம் கோரியுள்ளமை குறித்துப் பரிசீலிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதென்று வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
ஆனால் தடை செய்யப்பட்ட ஓர் இயக்கத்திற்குச் சிலை அமைக்க அனுமதிக்கக் கூடாது என்று அரசாங்கம் பிரான்ஸ் அரசிடம் வலியுறுத்தியிருந்தும், இச்சிலையானது பிரான்ஸில் உள்ள இலங்கைத் தமிழர்களால் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளமை தெரிந்ததே. இது தொடர்பாக, பிரான்ஸிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடாகவும் இலங்கையிலுள்ள பிரான்ஸ் தூதரகத்தின் ஊடாகவும் அரசாங்கத்தின் நிலைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக