02 நவம்பர் 2010

இராணுவ சிப்பாயை ஓட ஓடத் தாக்கிய தமிழ் இளைஞர்கள்!

இராணுவத்தினரால் கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இரண்டு இளைஞர்கள் இராணுவப் புலனாய்வுப்பிரிவினரால் வைத்தியசாலையிலிருந்து நேற்றைய தினம் கடத்திச்செல்லப்பட்டுள்ளனர்.
இச்சம்வம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது :
கடந்த 23 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் அச்சுவேலி பஸ்தரிப்பு நிலையத்தில் இரண்டு குடிகாரர்களுக்கிடையில் சண்டை நடைபெற்றுள்ளது இதன்போது அப்பகுதியில் நின்றுகொண்டிருந்த இராணுவப் புலானாய்வுப்பிரிவினைச் சேர்நத ஒருவர் அவர்களை சமாதானப்படுத்த முற்பட்டுள்ளார். இதன்போது குடிகாரர்கள் இருவரும் சேர்ந்து அந்த இராணுவச் சிப்பாயை நையப்புடைந்துள்ளனர். அடி தாங்க முடியாமல் அவர் ஓட ஆரம்பித்திருக்கிறார். ஆனால் தமிழ் குடி மகன் இருவரும் அவரை விடவே இல்லை. துரத்தித் துரத்தி அடித்துள்ளார்கள்.
அடிதாங்க முடியாமல் அவர் அருகிலுள்ள பலநோக்குக்கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் ஒடியபோதும் அவர்கள் அங்கும் அவரை கலைத்துக்கொண்டு வந்து அடிக்கத் தொடங்கியபோது அங்கிருந்த இரண்டு இளைஞர்களிடம் இவ் இரண்டு பேரையும் பிடிக்கச்சொல்லி கெஞ்சியுள்ளார் இராணுவச் சிப்பாய். இருந்தாலும் அங்கு நின்ற இளைஞர்கள் இவ்விருவரையும் பிடிக்க பயந்து பிடிக்கவில்லை. சம்பவத்தை அறிந்து பல இராணுவத்தினர் அங்கு குவிந்து , போதையில் இருந்த அந்த இரண்டு தமிழ் இளைஞர்களை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இராணுவத்தின் கடுமையான தாக்குதலால் பல் உள்காயங்களுக்கு ஆளான அவ்விரு இளைஞர்களும் யாழ் போதனை வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெற்றுள்ளனர். இதனை எப்படியோ அறிந்த புலனாய்வுப் பிரிவினர் அங்கு அதிகாலை 6 மணிக்குச் சென்று, தாம் சிகிச்சை தருவதாகக்கூறி அவர்களை அழைத்துப்போய், சிகிச்சை கொடுத்துவிட்டு, மாலை வீட்டிற்கு கொண்டுசென்று, பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். இனி அவர்கள் வைத்தியசாலைக்குச் செல்லக்கூடாது எனவும், நடந்த விடையத்தை எவரிடமும் சொல்லக்கூடாது எனவும் அவர்கள் மிரட்டிச் சென்றதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக