05 நவம்பர் 2010

தேசியக்கொடியினை அங்கீகரிக்கக்கோரி வழக்கு!

தமிழீழ விடுதலைப்புலிகளை தடை செய்யப்பட்டிருந்தாலும் தமிழீழ தேசியக் கொடிக்கு பிரித்தானியாவில் தடை ஏதும் இல்லை. ஆனாலும் தமிழீழ விடுதலைப்புலிகள் உருவாக்கிய கொடி இது என வீதிப்போராட்டங்களில் தமிழீழத் தேசியக்கொடியேந்தியோர் கைதுசெய்யப்பட்டு தேசியக் கொடி பறிக்கப்பட்டு பின்பு விடுதலை செய்யப்படுவார்கள். அது போல் தமிழர் நிகழ்வுகளிலும் தேசியக் கொடி தவிர்க்கப்பட்டே வந்துள்ளது.
ஆனாலும் பல போராட்டங்களில் தேசியக் கொடியேந்தினாலும் காவல் துறையினர் கண்டுகொள்ளாமல் விட்டுள்ளனர். சில நேரங்களில் மட்டும் தடாலடியாக பறித்தெடுப்பார்கள். ஏன் இந்த முரண்பாடு என கேள்வி கேட்கப்படும் போது உயர் அதிகாரிகளின் உத்தரவு என மட்டுமே கூறுவார்கள் மற்றபடி தேசியக் கொடி தடைசெய்யப்பட்டுள்ளதென காவல் துறையினரிடம் எவ்வித சட்ட ஆதாரங்களும் இருந்ததில்லை.
தடைசெய்யப்பட்ட ஓர் அமைப்பின் அடையாளங்களை பகிரங்கப்படுத்துதல் பொது இடங்களில் பயன்படுத்துதல் சட்டப்படி தவறு என 2000ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டங்கள் கூறுகின்ற போதும் தேசியக் கொடிக்கு அதாவது தமிழீழ விடுதலைப்புலிகள் என பொறிக்கப்படதா இலட்சினைக்கு சட்டப்படி பிரித்தனியாவில் தடையேதும் இல்லை.
ஓரு மனிதனுக்கு எப்படி தாய் ஒரு அடையாளமே அதைப்போன்றதுதான் தமிழர்கள் அனைவருக்கும் தேசியக் கொடி ஓர் அடையாளம். தேசியக் கொடி எமது உரிமை. அந்த உரிமையை நிலைநாட்டவே தேசியக் கொடியினை பிரித்தானியாவில் அங்கீகரிக்கக்கோரி வழக்கு தாக்கல் செய்ய முடிவானது. சுவிஸ் ஈழத்தமிழர் அவையின் உதவியுடன் பிரித்தானியாவில் உண்ணாவிரம் இருந்த பரமேஸ்வரன் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.
அதன் முதற்கட்டமாக சட்டத்தாரணிகளை நியமிக்கும் பணி நேற்று நிறைவடைந்தது. பிரித்தானியாவில் மிகவும் புகழ் பெற்ற சட்டத்தாரணிகள் இந்த வழக்கில் வாதாடவுள்ளனர். ஆதாரங்கள் மற்றும் சட்ட நுனுக்கங்கள் ஆராயப்பட்ட பின்னர் வெகு விரைவில் இவ் வழக்கு வழக்காடு மன்றத்தில் விசாரனைக்கு வர உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக