04 நவம்பர் 2010

தெற்கில் மீண்டும் ஒரு கிளர்ச்சி வெடிக்கலாம்!

தெற்கில் மீண்டுமொரு கிளர்ச்சி வெடிப்பதற்கான
திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருப்பதாக
புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதாக
ஊடகத்துறை அமைச்சர் கெகலிய ரம்புக்கெல தெர்வித்துள்ளார்.
அவ்வாறானதொரு கிளர்ச்சி வெடிக்கும் பட்சத்தில் அனைத்து
பல்கலைக்கழக மாணவர் அமைப்பும்,அதன் பிரதான பங்காளியாக
இருக்கக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் அவர் மேலும்
தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்களும் நாட்டின் பொதுவான சட்ட திட்டங்களுக்கு
உட்பட்டவர்கள் என்ற வகையில் இந்நாட்டில் மீண்டும் ஒரு கிளர்ச்சி
வெடிக்க அரசாங்கம் இடமளிக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
கெகலியவின் கூற்றின்படி பார்த்தால் அனைத்துப் பல்கலைக்கழக
மாணவர் ஒன்றியம் விரைவில் தடை செய்யப்படலாம் என்றே
உணரமுடிகிறது.பிரஸ்தாப மாணவர் அமைப்பு உடனடியாக தடை செய்யப்பட வேண்டுமென்று அண்மையில் விமல் வீரவன்சவும் வலியுறுத்தி இருந்தமை
குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக