10 நவம்பர் 2010

கொலை மிரட்டலால் பயந்து போயிருக்கும் இமெல்டா!

யாழ் மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமாருக்கு பல கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாகவும், தனது உயிருக்கு எந்த நேரமும் ஆபத்து நிகழலாம் எனவும் அவர் பாதுகாப்புத் துறைச் செயலாளர் கோட்டபாயவிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளதாக அறியப்படுகிறது. அனாமதேய தொலைபேசி அழைப்புகள் பல அவரது இல்லத்திற்கும், கையடக்க தொலைபேசிக்கும் வருவதாகவும், அதனூடாக பல கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவருக்கு உடனடிப் பாதுகாப்பு வழங்குமாறு பாதுகாப்புச் செயலகம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கு அமைவாக அவரது இல்லம் அமைந்திருக்கும் பழைய பூங்கா வீதிக்கும், மற்றும் அவரது அலுவலகத்திற்கும் இன்று முதல் இராணுவப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் எந்த இடத்திலும், உயர் பாதுகாப்பு வலையம் என்று ஒரு இடமும் இல்லை என அவர் குறிப்பிட்டிருந்தார். அப்படியாயின் பலாலிக்குச் செல்ல முடியுமா என எவராவது அவரிடம் கேட்டால் பலாலி யாழ்ப்பாணத்திலேயே இல்லை என்று அவர் பதில் கூறினால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
இது இவ்வாறிருக்க, கற்றுக்கொண்ட பாடத்திற்காக அரசாங்க ஆணைக்குழு முன்னர் புலிகளே சரணடையச் சென்ற மக்களைக் கொன்றனர் என்றும் அவர் சாட்சியம் வழங்கியிருந்தார். இதில் வேடிக்கையான விடயம் என்னவென்றால், அனைத்தையும் கூறி தான் அதைக் கேள்விப்பட்டதாகவே சொல்லியுள்ளார். கண்ணால் கண்ட சாட்சியங்களை விசாரித்து வரும் ஆணைக்குழு முன்பாக தான் கேள்விப்பட்டதாகக் கூறி சாட்சியமளித்த முதல் பெண் அரசாங்க அதிபர் இவராகத்தான் இருக்கமுடியும். இவர் கூறிய பொய் சாட்சிகளின் பலா பலனையே இவர் தற்போது அனுபவிக்க ஆரம்பித்துள்ளார்.
உண்மையாகவும் நேர்மையாகவும் உள்ள எவருக்கு கொலை அச்சுறுத்தல் வருகிறது. இவர் போன்ற பொய்யுரைக்கும் களவாணிகளுக்கே அச்சுறுத்தல் வருகிறது.

1 கருத்து:

  1. தன் இனத்தையே விற்றும் காட்டியும் கொடுக்கும் கருங்காலிகள் இருந்தென்ன பலன். இவர்கள் தமது சுயநலத்திற்காக தம் இனததையே கருவறுக்க முயற்சிக்கின்றார்கள். சிங்களவனுடன் சேர்ந்திருக்க வேண்டுமெனில் வேறு வழிகள் உண்டு. அதை செய்யவேண்டியது தானே. தன் இனத்தையே விற்று உண்ணும் கெடுகெட்ட இழிசெயல் தேவையா? இவர்களின் பொய்களும் புரட்டுகளும் எத்தனை காலம நிலைத்து நிற்கப் போகிறது. துன்பப்பட்ட தன் இனத்திற்கு செய்ய வேண்டியதை அழித்த இனத்திற்கு செய்து தனது பதவியை தக்க வைக்க முயல்கிறதா இந்த அசிங்கம். மரணம் தான் இவர்களுக்கான தண்டனை.

    பதிலளிநீக்கு