25 நவம்பர் 2010

மாவீரர் நாள் நிகழ்வுகள் கட்டாரிலும் நடைபெறுகிறது!

மத்திய கிழக்கில் முதன்முறையாக மாவீரர் நாள் அனுஷ்டானங்கள் இம்முறை கொண்டாடப்படவுள்ளதாக தெரிய வருகின்றது.
இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான கட்டார் சென்றுள்ள தமிழ் பேசும் வாலிபர்கள் சிலர் மத அடையாளங்களுக்கு அப்பால் ஒன்றிணைந்து அதனை ஏற்பாடு செய்துள்ளதாக கட்டாரிலிருந்து எமது விசேட செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
முற்றுமுழுதான அரபு நாடான கட்டாரில் இம்முறை பகிரங்க இடங்களில் மாவீரர் வாரத்தை அனுஷ்டிப்பதற்கு அழைப்பு விடுக்கும் தமிழ் மொழியிலான சுவரொட்டிகள் மற்றும் ஏனைய வழிகளிலான அறிவித்தல்கள் என்பன காட்சிப்படுத்தப்படுவதாக எமது விசேட செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
கட்டாரின் பிரபல முஸ்லிம் முக்கியஸ்தர்கள் மற்றும் அல்ஜசீரா தொலைக்காட்சி ஊழியர்கள் உள்ளிட்ட இன்னும் பல ஊடகவியலாளர்களும் அதற்கான ஆதரவை வழங்கியுள்ளனர்.
அல்ஜசீரா தொலைக்காட்சியின் ஊடாக அதன் செய்தியாளர் நாதியா பேகம் வழங்கிய நடுநிலையான செய்திகளின் காரணமாக தற்போதைய நிலையில் கட்டார் மக்களில் பெரும்பாலானவர்கள் இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் குறித்து நன்கறிந்தவர்களாக உள்ளனர்.
அதன் காரணமாக எதிர்வரும் காலங்களில் இலங்கைத் தமிழ்- முஸ்லிம் மக்களின் அரசியல் போராட்டங்களுக்கு ஆதரவு வழங்கவும் கட்டார் ஊடகவியலாளர்கள் சிலர் முன்வந்துள்ளனர். அத்துடன் தற்போதைக்கு அரபு மொழி ஊடகங்களில் அது தொடர்பான கட்டுரைகளும் வெளியாகத் தொடங்கியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக