17 நவம்பர் 2010

தளபதி விநாயகம் உயிருடன் இருக்கின்றார் என்கிறார் றொகான் குணரட்ன.

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப்பிரிவு ஐரோப்பாவில் மீள இயங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பயங்கரவாத தடுப்பு தொடர்பான நிபுணர் பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார். புலிகளின் ஆயுத மற்றும் புலனாய்வுப் பிரிவினர் இயங்குவதற்கு முனைப்புக் காட்டிவருவதாக குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐரோப்பாவின் பல பகுதிகளில் இருந்தும் ஆயுதப்போராட்டத்தை நடத்துவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவராகக் கருதப்படும் விநாயகம் என்பவர் முயற்சித்து வருகின்றார்.விநாயகம் மிகவும் ஆபத்தான நபர். கடந்தகாலங்களில் தெற்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதல்கள், படுகொலைகள் போன்றவற்றை விநாயகம் என்பவரே வழி நடத்தியுள்ளார்.
குறித்த விநாயகத்தின் நோக்கங்கள் மற்றும் இலக்குகள் குறித்து இலங்கை அரசாங்கம் விழிப்புடன் செயற்பட வேண்டும். விநாயகம் ஐரோப்பாவில் சுதந்திரமாக சுற்றித் திரிவதாகவும் அவரைக் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
2009ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் விநாயகம் கொல்லப்பட்டதாக இராணுவம் நம்பிக்கை வெளியிட்டபோதிலும் உண்மையில் விநாயகம் உயிரிழக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக