அன்பார்ந்த உலகத் தமிழ் மக்களே...
வெகு விரைவில் வெளிவர இருக்கும் விஜய் அசின் நடித்த காவலன் படத்தை உலகமெங்கும் புறக்கணிக்குமாறு உரிமையோடு வேண்டும் அதே நேரம் அதற்கான வலுவான காரணங்களையும் முன்வைக்க விரும்புகின்றோம்.
முதலில் படப்பிடிப்புக்கு மட்டுமே இலங்கை சென்றேன் என்றார் அசின், பின்பு போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யவே சென்றேன் என பல்டியடித்தார்.
எல்லாவற்றையும் விட கொடுமையான விடயம் எதுவெனில் ஒருவருக்கு கண் சிகிச்சை முடிந்த பின் நீங்கள் முதலில் யாரை பார்க்க விரும்புகின்றீர்கள் என கேட்ட கேள்விக்கு நான் அசினை மட்டுமே பார்க்க விரும்புகின்றேன் என அவர் கூறியதாக அசின் பேட்டிகளில் கூறினார்.
இதில் இருந்து சிங்களம் செய்ய நினைக்கும் பரப்புரை என்னவென்று உங்களுக்கு புரிந்திருக்க வேண்டும்.
ஆம் தமிழினத்தை அனைத்து விதமான போதைக்குள்ளும் வைத்திருக்க விரும்பும் சிங்களம் தன் முதற் பார்வையே நடிகைமேல்தான் இருக்க வேண்டும் எனும் அளவுக்கு தமிழர்கள் சினிமா பைத்தியங்கள் எனவும் அதை விடுதலைப்புலிகள் தடுத்ததாகவும் பிரச்சாரங்கள் செய்கின்றார்கள்.
இது ஒரு நடிகைக்கு எதிரான பிரச்சாரம் அல்ல பேரினவதாத்தின் தந்திரத்திற்கு எதிரான பிரச்சாரம்.
சற்று யோசித்துப் பாருங்கள் பல பல கோடிகள் திட்டங்களோடும் உதவிகளோடும் சென்ற இந்திய குழுவோடு கூட [ திருமாவளவன், கனிமொழி, பாலு போன்றோர் சென்ற போது ] ஜனாதிபதியோ அல்லது பிரதமரே ஏன் முதலமைச்சர்கூட அவர்களோடு செல்லவில்லை.
ஆனால் இந்திய அளவில் கூட புகழ் பெறாத ஒரு நடிகையோடு அவர் சென்ற இடம் முளுவதும் அந்த நாட்டின் முதற் பெண் அதாவது ஜனாதிபதியின் மனைவி உடன் சென்று வந்ததன் மர்மம் என்ன?.
அசினோடு சென்ற சல்மான் கானுக்கோ அல்லது உண்மையில் உதவிகள் செய்த விவேக் ஓபராய்க்கோ கூட இந்த கவுரவங்கள் வழங்கப்படவில்லை.
அதோடு அசினால் சிகிச்சை அளிக்கப்பட்டவர்கள் என கூறப்படுவோர்க்கு 10க்கும் மேற்பட்டவர்களுக்கு முளுமையாக கண் பார்வை பறிக்கப்பட்டுள்ளது சிகிச்சை எனும் பெயரால். சிறு வலி என்றாலும் கால்களை அகற்றியும் கைகளை அகற்றியும் தமிழர்களை முடவர்களாக்கியுள்ளது சிங்கள அரசு.
இவைகள் அனைத்தும் சிங்கள அரசால் திட்டமிட்டு நடத்தப்படும் இன அழிப்பு நடவடிக்கையே தவிர வேறில்லை. அதற்கு துணைபோகும் அனைவரையும் புறக்கணிப்போம்.
இப்பட புறக்கணிப்பு ஒரு பாடமாக அனைவருக்கும் அமைய வேண்டும். ஏற்கனவே பல கடிதங்ளை தமிழ் நாட்டின் பல திரைப்பட சங்கங்களுக்கு அனுப்பியிருந்தோம் அசின் மன்னிப்பு கோருவார் என அவர்களால் சொல்லப்பட்டாலும் இதுவரை அப்படி எதுவும் நிகழவில்லை மாறாக மேலும் திமிராகவே காணப்பட்டார் அசின் உதவி செய்யவே சென்றேன் என்றவர் இயக்குனர் படப்பிடிப்பு இலங்கையில் வைத்ததற்கு நான் மன்னிப்பு கோர மாட்டேன் என்றார்.
படப்பிடிப்புக்கு செல்பவர்களுக்கு ஜனாதிபதியின் மனைவியே உதவி செய்வரா? ஆச்சரியமான நாடுதான் இலங்கை. இலங்கை அரசின் ஊதுகுழல்கள் அனைவரையும் துடைத்தெறிவோம்.
அகங்கார ஆணவம் பிடித்த இந்த நடிகையின் படத்தினை புறக்கணித்து தமிழர்கள் கிள்ளுக் கிரையல்ல என்பதனை காட்டவேண்டும். அத்துடன் அரசில் சாக்கடையில் விழ இருக்கும் விஜயுக்கும் ஒரு எச்சரிக்கையாகட்டும். கொலைவெறியருடன் சோந்து தப்பிப் பிழைத்த அப்பாவி தமிழரை குருடாக்கியவள்.
பதிலளிநீக்கு