31 அக்டோபர் 2010

எல்லா மக்களினது அபிலாஷைகளையும் ஸ்ரீலங்கா புரிந்து செயற்படவேண்டும்!

இலங்கையில் உள்ள அனைத்து இன மக்களினதும் அபிலாசைகளைப் புரிந்துகொண்டு முன்னேற்ற இலக்குகளை அடைவதற்கு முன்னுரிமையளிக்கப்பட வேண்டுமென அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் பிலிப் ஜே குரோவ்லி தெரிவித்தார்.
அத்துடன் உள்நாட்டு யுத்தம் முடிபுற்றதன் பின்வந்த காலப்பகுதியில் இலங்கை அரசாங்கமானது நாட்டை முன்னேற்றப் பாதையில் நடத்திச் செல்வதற்கான அனைத்துத் தகுதிகளையும் கொண்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கஇராஜங்கத் திணைக்களத்தின் பேச்சாளரும், உதவிச் செயலாளருமான பிலிப் ஜே குரோவ்லி நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் வைத்து மேற்குறித்தவாறான கருத்தை வெளி யிட்டுள்ளார்.
இலங்கையில் போர்க் குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளதாக பல் வேறு தரப்புகளாலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு கொண்டிருக்கும் சூழ்நிலையில், அது தொடர்பான உண்மைகளைக் கண்டறிவதிலும் அனைத்துத் தரப்பினருக்குமிடையிலான முரண் பாடுகளைக்களைவது தொடர்பிலும் அரசாங்கம் முன்னுரிமை அளிக்கவேண்டுமென அமெரிக்கா எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் மூலம் மாபெரும் மக்கள் பலமொன்றைப் பெற்றுக்கொண் டுள்ள அரசாங்கம் அனைத்து இன மக்களிடையேயும், இன ஒற்றுமையைக் கட்டியயழுப்பும் முயற்சிகளை முடுக்கி விட்டு, எல்லா மக்களினதும் அபிலாசைகளைப் புரிந்து கொண்டு செயற்படும் போதுதான் சுபீட்சமான இலங்கையைக் கட்டியயழுப்பக் கூடியதாக இருக்கும்.
இலங்கையின் எதிர்காலத்திற்கு அது மிக முக்கியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக