உலகிலேயே பாரியளவிலான சட்டவிரோத சிறை முகாம்களை இலங்கை வைத்திருப்பதாக ஜனநாயகத்திற்கான பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் அமைப்பின் உறுப்பினரான பேராசிரியர் குமார் டேவிட் தெரிவித்திருக்கிறார். சர்வதேச நீதியரசர்கள் ஆணைக்குழுவை மேற்கோள்காட்டி இதனைத் தெரிவித்துள்ள பேராசிரியர் குமார் டேவிட், 8,000 அரசியல் கைதிகள் இந்த முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார். ஜனநாயகத்திற்கான பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் அமைப்பு நேற்று புதன்கிழமை மாலை நடத்திய செய்தியாளர் மாநாட்டின் போது அவர் இதனை தெரிவித்திருக்கிறார்.
நன்கு அறியப்பட்ட அரசியல் கைதிகளில் ஒருவராக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இருப்பதாகவும் பேராசிரியர் டேவிட் தெரிவித்திருக்கிறார்.
அத்துடன் சட்டரீதியான ஏற்பாடுகளின்றி ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக