14 அக்டோபர் 2010

பிரித்தானிய அரச குடும்பத்தோடு மகிந்த அமர்வதா?: சூடான விவாதம்!

இந்தியாவில் நிறைவடைந்த காமன்வெலத் போட்டிகளின் விழாவில் பிரித்தானிய அரச குடும்ப அங்கத்தவர் அருகாமையில் போர் குற்றங்களில் ஈடுபட்ட மகிந்த அமர்வதா என பிரித்தானிய நாடாளுமன்றில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இன்று பிரித்தானிய பாரளுமன்றில் நடைபெற்ற கூட்டத் தொடரில் கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சோஃபி மக்டக்ளஸ், பிரித்தானிய வெளியுறவுக் கொள்கை எங்கே செல்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார். போர் குற்றங்கள் புரிந்த மகிந்த ராஜபகஷ பிரித்தானிய அரச குடும்ப உறுப்பினர் அருகில் உட்காருவதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக விவாதம் ஒன்றை பாராளுமன்றில் நடத்த சபாநாயகர் அனுமதி வழங்கவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். இந்தியாவில் நிறைவடைந்துள்ள காமன்வெலத் போட்டிகளின் இறுதி நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்ள பிரித்தானியாவில் இருந்து இளவரசர் எட்வாட் அவர்கள் சென்றிருந்தார். இந்நிகழ்வுகளில் அவர் அமர்ந்திருந்த ஆசனத்துக்கு அடுத்தபடியாக மகிந்தவும் அமர்ந்திருந்தார். பிரித்தானியாவில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளான சர்ச்சைக்குரிய மகிந்த எவ்வாறு பிரித்தானிய அரச குடும்பத்தோடு அமர்ந்திருக்கலாம் என தற்போது கடும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் சோஃபி பல தடவை தமிழர்களுக்காக குரல்கொடுத்தவர், கொடுத்தும் வருபவர் என்பதை எவரும் மறுக்கமுடியாது. தமிழர்களுக்காக இவர் ஆற்றிவரும் சேவை பாராட்டுதலுக்குரியது.

1 கருத்து:

  1. கண்கொத்திப் பாம்பாய் 21 நூற்றாண்டின் கொடூர கொலைவெறியனின் செயல்களை அவதானித்துக கொண்டிருக்கும பிரி.பா.உறுப்பினருக்கு எனது நன்றிகள். இந்த கொலைவெறியனை உலகத் தலைவர்களே நிராகரியுங்கள். விரைவில் நீதியின் முன் நிறுத்துங்கள். யாழ்

    பதிலளிநீக்கு