கிளிநொச்சி கனகாம்பிகைகுளம் பகுதியில் நேற்று முன்தினம் மாலை காணாமல்போன மாணவன் ஒருவர் நேற்று காலை குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். அவரது சடலத்தின் கழுத்துப் பகுதியில் காயங்கள் இருப்பதுடன் வாய்ப் பகுதியில் இரத்தக் கறைகள் காணப்படுவதாகவும் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.
கிளிநொச்சியில் நேற்றுமுன்தினம் காணாமல் போயிருந்த கனகாம்பிகைகுளம் அ.த.க. பாடசாலை மாணவனான காந்தலிங்கம் சங்கீதன்(வயது 9)என்ற மாணவன் நேற்று குளத் திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்றுமுன்தினம் தனியார் கல்வி நிறுவ னத்திற்கு சென்ற பிரஸ்தாப மாணவன், அங்கு வகுப்புகள் இடம்பெறாத நிலையில் வீட்டுக் குத் திரும்பியுள்ளார்.
அவ்வேளை சைக்கிளில் வந்த நபர் ஒருவர் “நீதானே காந்தலிங்கத்தின் மகன் ” என தெரிவித்து அழைத்துச் சென்றதாக சங்கீதனுடன் சென்ற சக மாணவர்கள் தெரி வித்ததாக உறவினர்கள் கூறினர். மாணவனைக் காணாத நிலையில் நேற் றுமுன்தினம் இரவே கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் அவனது பெற்றோர் முறையிட் டுள்ளனர்.இந்நிலையில் நேற்றுக்காலை சிறுவனின் உடல் கனகாம்பிகைக் குளத்தில் இருந்து மீட் கப்பட்டது. மீட்கப்பட்ட சடலத்தின் கழுத்துப் பகுதியில் காயங்கள் காணப்படுவதாகவும், வாயில் இரத் தக் கறைகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
காணாமல்போன சிறுவன் குளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டமை குறித்த தகவல் காட்டுத் தீபோல ஊர் மக்களிடையே பரவியதும் அந்தப் பிரதேசத்து மக்களிடையே பெரும் பதற்றமும் பீதியும் ஏற்பட்டுள்ளது.பாடசாலைக்குச் சென்றுள்ள தமது பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்து பெற்றோர் அச்சமடைந்து பாடசாலைக்குச் சென்று அவர் களைப் பாதுகாப்பாக வீடுகளுக்கு கூட்டி வருவதற்கு முனைந்துள்ளார்கள்.
சம்பவம் குறித்து அந்தப்பிரதேசத்திற்குப் பொறுப்பான கிராமசேவை அதிகாரி மூலம் பொலிஸாருக்கும்,இராணுவத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவம் நடை பெற்ற இடத்துக்குச் சென்ற கிளிநொச்சி மாவட்ட நீதவான் சிவகுமார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் பிரேதப் பரிசோ தனைக்காக சடலத்தை வவுனியா வைத்திய சாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார். சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. சடலமாக மீட்கப்பட்ட மாணவன் பாடகர் சாந்தனின் சகோதரனின் மகன் என தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக