04 அக்டோபர் 2010

பத்திரிகை அலுவலகத்தைத் தாக்க ஈ.பி.டி.பி இனர் முயற்சி!

வடமராட்சி கிழக்குப் பகுதியிலுள்ள குடத்தனை மற்றும் மணற்காடு ஆகிய இடங்களிலிருந்து ஈ.பி.டி.பி ஐச் சேர்ந்த நபர்கள் சட்டவிரோதமாக மணல் அகழ்கிறார்கள் என்றும் இதைத் தடுக்குமாறு அப்பகுதி மக்கள் த.தே.கூ இடம் முறையிட்டுள்ளதாகவும் யாழ்ப்பாணம் உள்ளூர் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டிருந்தது. ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தாவின் அமைப்பான மகேஸ்வரி ஃபண்ட்ஸ் என்ற நிறுவனமே இந்த மண் அகழ்வில் ஈடுபடுவதாக ஞாயிற்றுக்கிழமைய பதிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இச்செய்தி வெளியானதை அடுத்து இரண்டு பஸ்களில் குறித்த பத்திரிகை அலுவலகம் முன்னால் கூடிய ஈ.பி.டி,பி இனர் அவ்வலுவலகத்தைத் தாக்க முயற்சித்தனர். எனினும் பத்திரிகையின் ஆசிரியர்களும் சில ஈ.பி.டி.பி இனரும் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இத்தாக்குதல் முயற்சி கைவிடப்பட்டுள்ளது.
தமது பத்திரிகை அலுவலகத்துக்கு கூடிய பாதுகாப்புத் தருமாறு போலீஸ் தரப்பிடம் பத்திரிகையாளர்கள் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து பத்திரிகை அலுவலகத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

1 கருத்து:

  1. அட இப்படியான செயல்களுக்குத் தானே தமது கோவணத்தையும் கழற்றிவிட்டு கொ.வெ. சிங்களத்துடன் கட்டிப் பிடிதது உறவு கொண்டாடுகிறார்கள். இவைகளை வெளியிட்டால் கோபம் வராமல் என்ன செய்யும்? அது சரி அப்ப வெள்ளை வான் பிஸினசை கை விட்டாகி விட்டதா? ஆக என்ன ஒரு அனைப்பு மெய் சிலிர்க்கிறது.

    பதிலளிநீக்கு