தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனின் புதல்வி துவாரகா கடந்த வருடம் இடம்பெற்ற யுத்தத்தில் கொல்லப்பட்டார் என்று அரச ஊடகங்கள் பாதுகாப்பு அமைச்சை மேற்கோள்காட்டி சில காலத்துக்கு முன் செய்தி வெளியிட்டிருந்தன. அச்செய்திக்கு ஆதரவாக துவாரகாவின் உடல் என்று புகைப்பட, வீடியோ ஆதாரங்களையும் அவ்வூடகங்கள் வெளிப்படுத்தி இருந்தன. ஆனால் அவை துவாரகாவினுடையது அல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனால் அவ்வுடல் துவாரகாவினுடையது அல்ல என்றும் புலிகளின் ஊடகப் பிரிவான நிதர்சனம், புலிகளின் வானொலியான புலிகளின் குரல் ஆகியவற்றில் அறிவிப் பாளராக கடமையாற்றிய இசைப்பிரியா (வயது 28) என்பவர் உடையது என்றும் பின்னர் தகவல் கசிந்தது.
அத்துடன் துவாரகா செத்துவிட்டார் என்கிற செய்தியும் அடங்கிப்போய் விட்டது. இந்நிலையில் பிரித்தானிய தமிழர் பேரவையால் யுத்தக்குற்ற ஆதாரங்கள் என்று புதிதாக வெளியிடப்பட்டிருக்கும் புகைப்படங்களில் ஒன்றில் இசைப் பிரியாவின் சடலத்தை அடையாளம் காணமுடிகின்றது. சரண் அடைந்திருந்த தமிழர்களில் ஒரு தொகையினர் கடந்த வருடம் மே 18ஆம் திகதி காலை இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றும் அவர்களில் ஒரு சிலருடைய சடலங்களே இவை என்றும் அடித்துக் கூறுகிறது பிரித்தானிய தமிழர் பேரவை.
ஆனால் பேரவையின் இப் புகைப்பட ஆதாரங்கள் பொய்யானவை என்றும் போலியானவை என்றும் ஒரேயடியாக மறுத்திருக்கின்றார் பிரித்தானியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருக்கும் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக