
டப்ளினின் இரு நிகழ்வுகளில் முதலாவது நிகழ்வு ஒக்ரோபர் ஆறாம் திகதியன்று நடக்கவுள்ளது. டப்ளின் சிற்றி பல்கலைக்கழகத்தின் வணிகப் பாடசாலையில் நடக்கவுள்ள இந்நிகழ்வில் ஐ.நா இன் முன்னாள் துணைச் செயலாளர் டெனிஸ் ஹல்லிடே "இலங்கை குறித்து டப்ளின் தீர்ப்பு: செய்யப்படவேண்டியது என்ன?" என்ற தலைப்பில் உரையாற்றவுள்ளார்.
அடுத்தநாள் வியாழக்கிழமை நடக்கவுள்ள இரண்டாம் நாள் நிக்ழ்வு ட்ரினிற்றி காலேஜ் டப்ளினில், சிஞ்ச் தியேட்டரில் நடக்கவுள்ளது. இங்கு மனித உரிமைகள் காப்பாளர்களின் பாதுகாப்புக்கான சர்வதேச அமைப்பின் பணிப்பாளர் மேரி லாலர் "இலங்கையில் போர்க் குற்றங்கள்: சர்வதேச கருத்துக்கள்" என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.
மேற்குறிப்பிட்ட இரு பேச்சாளர்களுமே இலங்கை குறித்த மக்கள் நீதிமன்றின் தீர்ப்பாளர்களாக இருந்தவர்கள் ஆவர். மேற்படி உரைகளின்போது சில வீடியோ ஆதாரங்களும் வெளிவிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக