19 அக்டோபர் 2010

சிங்கா படையணிக்கு எதிராக பிரச்சாரம் செய்யவும் - கோத்தபாய.

கொழும்பு ஆமர்வீதி பிரதேசத்தில் கடந்த 13 திகதி இடம்பெற்ற கடத்தல் சம்பவம் தொடர்பாக இலங்கை இராணுவத்தின் சிங்கா படைப் பிரிவின் இரண்டு இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சரத் பொன்சேகாவால் உருவாக்கப்பட்ட சிங்கா படையணிமீது ஏற்கனவே வெறுப்பும் அவநம்பிக்கையும் கொண்டுள்ள பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இச்சம்பவத்தைத் தனக்குச் சாதகமாகப் பாவிக்க எண்ணியுள்ளார். எனவே இக்குறித்த சம்பவம் தொடர்பான சிங்கா படையணிக்கு எதிராக விரிவான பிரசாரங்களை வழங்குமாறு அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இராணுவ அதிகாரிகள் அல்லது படையினர் ஏதேனும் குற்றச் செயல் சம்பந்தமாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டால் அந்தச் சந்தேக நபர்கள் குறித்து அவர்கள் அங்கம் வகிக்கும் படைப் பிரிவிற்கு அறிவிக்கப்படுவது வழமையாகும். கோத்தபாயவின் உத்தரவின் பேரில் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் டி.ஆர்.எல். ரணவீர கடத்தல் சம்பந்தமாக கைதுசெய்யப்பட்ட மூன்று இராணுவத்தினரில் இருவர் சிங்காப் படைப் பிரிவில் பணியாற்றியவர்கள் எனக் கூறப்படுகின்ற போதிலும் இதுகுறித்து அப்படைப்பிரிவுடன் தொடர்பு கொண்டதாகத் தெரியவில்லை.
கொழும்பு செட்டியார் தெருவிலுள்ள நகை வியாபாரி ஒருவரை கடத்திச் சென்று இரண்டு கோடி ரூபா கப்பம் கோரியமை சம்பந்தகமாகவே இந்த இராணுவத்தினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக