அண்மையில் இந்தியாவில் இடம் பெற்ற பொதுநலவாய போட்டிகளின் நிறைவு விழாவில் கலந்துகொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவமதிக்கப்பட்டதாக சண்டே லீடர் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, விழாவின் சிறப்பதிதியாக அழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் பிரசாரம் செய்து வந்தது. இதன் அடிப்படையிலேயே கடந்த புதன்கிழமை ஜனாதிபதி இந்தியாவுக்கு புறப்பட்டு சென்றார்.அங்கு பிரித்தானிய இளவரசர் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களுக்கு அருகிலேயே ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் அமர்ந்திருந்தார்.
இதன்போது வருகைதந்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் கைலாகு செய்ய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பெரும் ஆர்வத்துடன் சென்றபோதும்,மன்மோகன் சிங் அதனை பெரிதாக கண்டு கொள்ளவில்லை.இது இந்த விழாவில் கலந்து கொள்ள வந்த 65 ஆயிரம் பார்வையாளர்கள் மற்றும் இந்நிகழ்வை உலகம் முழுவதும் தொலைக் காட்சியில் பார்வையிட்ட கோடிக்கணக்கான தமிழ் மக்கள் மத்தியில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவமானப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த நிகழ்வில் விசேட விருந்தினராக ஜனாதிபதி அழைக்கப்பட்டதாக முன்னர் பிரசாரம் செய்யப்பட்டபோதும், அவருக்கு இந்த நிகழ்வில் உரையாற்றுவதற்கேனும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையில்,அவர் சிறப்பதிதியாக அழைக்கப்படவில்லை என்பதும், அவருக்கு உரையாற்ற வாய்ப்பளிக்கப்படவில்லை என்பதும் ஜனாதிபதிக்கு பலத்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளதாக சண்டே லீடர் சுட்டிக்காட்டியுள்ளது.
சிங்கு இப்போது கொலைபழியில் இருந்து தப்பிக்க முயல்கிறாரோ? அல்லது தமிழகத்தின் எதிர்ப்பிற்குப் பயந்துவிட்டாரோ? எது எப்படியிருப்பினும் சிங்கும் கொலைகளின் பங்குதாரி என்பதனை தமிழனம் மறக்காது. கொலைவெறியனை அழைக்க முன் யோசித்திருக்க வேண்டும். யாழ்
பதிலளிநீக்கு