இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவைக் கொலை செய்வதற்காக தாம் வெடிகுண்டொன்றை வழங்கியதாக விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவர் குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளாராம். இந்நபருக்கு எதிரான வழக்கு விசாரணைகள் முடிந்துள்ள நிலையில் வருகின்ற 27 ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
குறித்த நபர் தன்மீது சாட்டப்பட்ட குற்றத்தை முன்னர் ஏற்கவில்லை என்றும் ஆனால் பின்னர் குற்றத்தை ஏற்றுள்ளார் எனவும் கூறப்படுகிறது. எனவே குற்றம் சாட்டப்பட்டுள்ள பச்சைவேல் இலங்கேஸ்வரன் எனப்படும் இந்நபருக்கு கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி வரவேவா வருகின்ற புதன்கிழமை தீர்ப்புக் கூறுகிறார்.
1999 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த சந்திரிக்கா மீது வெடிகுண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் சந்திரிக்காவின் ஒரு கண் பார்வை இழந்தது. இவ்வெடிச் சம்பவத்துடன் தொடர்பான ஒரு பெண் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டிருந்தனராம். இச்சம்பவத்தில் 21 பேர் கொல்லப்பட்டு 80 பேர் காயமடைந்தனர். இதன் விசாரணை 2001 ஆம் ஆண்டிலிருந்து நடந்து வருகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக