29 அக்டோபர் 2010

நோர்வே இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கியிருக்கலாம் என சந்தேகம்!

நோர்வே, இறுதி யுத்தத்தின்போது இலங்கைக்கு ஆயுதங்களை இரகசிய மாக விற்பனை செய்துள்ளது என்று சந்தேகிக்கப்படுகிறது.நோர்வேயை தள மாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மனிதாபிமான அமைப்புகளில் ஒன் றான நோர்வேயியன் சேர்ச் எயிட் வெளியிட்ட அறிக்கை ஒன்றிலேயே, இலங்கைக்கு நோர்வே இரகசியமான முறையில் ஆயுதங்களை விநியோகித்து உள் ளது என்று சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோர்வே அமெரிக்காவுக்கு ஏராளமான ஆயுதங்களை விநியோகித்து உள்ளது. நோர்வேயின் ஆயுதங்களின் உதவியுடன் ஈராக்குடனான அமெரிக்காவின் யுத்தத்தில் 200 ஈராக்கியர்கள் குறைந்தது கொல்லப் பட்டிருக்கிறார்கள் என இம் மனிதாபிமான அமைப்பின் செயலாளர் அற்லி சொமர்பில்ட் மேற்படி அறிக்கையில் தெரிவித்து உள்ளார். அமெரிக்க இராணுவத்தினர்தான் நோர்வேயின் அதிகளவிலான வாடிக்கையாளர் என்று தெரிவித்துள்ள அவர், இலங்கை சூடான், கொங்கோ ஆகிய நாடுகளுக்கும் நோர்வே ஆயுதங்களை விற்பனை செய்துள் ளது என்றும் கூறினார்.
நோர்வே ஆயுத விற்பனை மூலமாக பெரும் தொகை பணத்தை உலக நாடுகள் பலவற்றில் இருந்தும் சம்பாதிக்கின்றது .என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக