23 அக்டோபர் 2010

வருங்கால முதல்வர் எனக் கூறி கே.பி க்கு இராணுவத்தினர் சல்யூட்!

கடந்த ஆண்டு இலங்கை அரசினால் கைது செய்யப்பட்டு தற்போது அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கே.பி இடம் விசாரணைகள் தொடர்வதாக அரசு கூறி வருகின்ற போதிலும், அவரோ சுதந்திரமாக இலங்கையில் சகல பாகங்களுக்கும் சென்று வருகின்றார். அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்தையன்கட்டு குளத்திற்கு அருகில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்துக்கொண்ட கே.பி.க்கு இராணுவத்தினர் சல்யூட் அடித்து வரவேற்பளித்துள்ளனர். மேலும், புதுமாத்தளன் பிரதேசத்தில் இராணுவ உயர் அதிகாரியொருவரும் கே.பிக்கு இவ்வாறான வரவேற்பை அளித்துள்ளார்.
புதுமாத்தளன் பிரதேசத்திற்கு 200க்கும் மேற்பட்ட முக்கியஸ்தர்கள் வரவுள்ளதாகவும் அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துக்கொடுக்குமாறு புதுமாத்தளன் இராணுவ முகாமின் பொறுப்பதிகாரிக்கு மேல் மட்டத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதற்கு அமைய செயற்பட்ட அந்த இராணுவ அதிகாரி இவர்களுக்கு தேவையான உச்சளவிலான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். இந்த முக்கியஸ்தர்களில் அரசாங்கத்தினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் கே.பி உம் ஒருவராக வந்தார்.
இந்த விஜயத்தின் போது, கே.பியின் பயணப் பொதியை விமானப்படைச் சிப்பாய் ஒருவரே சுமந்து சென்றதையும் காணக்கூடியதாக இருந்துள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து, படையினர் மத்தியில் பெரும் அதிருப்தி நிலைமை ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இந்த நிகழ்வில் குமரன் பத்மநாதன் வட மாகாணத்தின் எதிர்கால முதலமைச்சர் என்றே அறிமுகப்படுத்தப்பட்டும் உள்ளார்.

1 கருத்து:

  1. சிங்களம் செஞ்சோற்றுக் கடன் தீர்க்கிறது இந்த துரோகிக்கு. ஆனால் தமிழினம் என்றும இந்த அசிங்கங்களை ஏற்றுக் கொள்ளாது.

    பதிலளிநீக்கு