26 அக்டோபர் 2010

கண்ணகி குடியிருப்பில் கே.பி க்கு கலை வந்துள்ளது!

மாவீரர் நாள் நெருங்கி வரும் நிலையில், கடந்த வாரம் வன்னி சென்ற கே.பி கண்ணகி குடியிருப்புக்குச் சென்று அங்குள்ள பிள்ளைகளுக்கு பாடசாலைப் பைகளை வழங்கி ஒரு கண் துடைப்பு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். மாவீரர்களின் பிள்ளைகளை தாம் பாதுகாக்கவேண்டும் எனவும், அவர்கள் தேசத்தை காக்க போராடி மாண்ட வீரர்களின் பிள்ளைகள் எனவும் கே.பி தெரிவித்துள்ளார். தாய் மண்ணுக்காகப் போராடிய மாவீர்ர்கள் கல்லறைகள் உடைக்கப்படும்போதும், மாவீரர் துயிலும் இல்லங்கள் தோண்டி எடுக்கப்பட்டு வீதியோர மண்ணாகப் பயன்படுத்தப்பட்ட போதும் எங்கிருந்தார் இந்த கே.பி ?
போற்றப்படவேண்டிய மாவீரர்களின் எலும்புகள் எல்லாம் வன்னி வீதிகளில் போட்டு, உலகில் எந்த ஒரு அரசும் செய்யத் துணியாத கேவலமான செயலை இலங்கை அரசு செய்யும்போது, கோத்தபாயவுடன் சல்லாபித்துக்கொண்டிருந்த கே.பிக்கு இப்போது எங்கிருந்து வந்தது இந்த ஞானம்? மாவீரர் நாள் நெருங்குவதால் அவ்வுரையை தான் ஆற்ற ஆசைப்படுகிறாரா ? இல்லை தன்னை தேசிய தலைவர் போல காட்ட முற்படுகிறாரா?இனியும் ஏமாற தமிழர்கள் என்ன முட்டாள்களா? இவர் கண்துடைப்பு நாடகமும், அதன் பின்னால் உள்ள சூட்சுமத்தையும் அனைத்துத் தமிழர்களும் அறிவார்கள் என்பதில் ஜயமில்லை.

1 கருத்து:

  1. இது மண்குதிரை என்பதை தமிழீழ மக்கள் உணர்ந்து பலகாலம். என்ன தான் ஆட்டம் காட்டினாலும் இனி ஏமாறமாட்டோம். தன் இனததையே எதிரிக்கு ஆக்கிரமிப்பாளனுக்கு காட்டிக் கொடுதத இத துரோகிகள் தண்டனை அனுபவிக்கும் காலம் வெகு தொலைவிலில்லை. சொகுசு வாழ்விற்கும் கொலவெறி இராணுவத்தானினதும் சல்யூட்டுக்கும் விலை போன இவர்களை தமிழினம் மன்னிக்காது. மறக்காது.

    பதிலளிநீக்கு