இந்தியாவின் தமிழீழ விடுதலைப்புலிகளாக நக்சலைட் தீவிரவாதிகள் உள்ளனர் என்று அந்நாட்டின் மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து வெளியாகும் சென்ரல் ஸ்ரேனிக்கல் என்ற ஆங்கில பத்திரிகை ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்துள் ளது. அதில் முக்கியமாகத் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு,
கடந்த 25 ஆண்டு காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலி கள் மிகவும் ஸ்திரமான நிலையில் சொந்தமாக அரசு ஒன்றை வடக்கு,கிழக்கு மாகாணங்களில் ஸ்தாபித்து ஆட்சி நடத்தியிருக் கின்றனர். தரைப்படை, கப்பல்படை, வான்படை ஆகியவற்றை யும் வைத்திருந்தனர்.அரசு மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்துவதும் அரசுடன் சமாதானப் பேச்சில் பேசுவதும் அவர் களின் சந்தர்ப்பவாத உபாயமாக இருந்து வந்துள்ளது.
நக்சலைட் தீவிரவாதம் நக்சல்வாடிப் பிரதேசத்தில் 1967 ஆம் ஆண்டு தோன்றியது. கடந்த 42 வருடங்களில் இந்தியாவின் 16 மாநிலங்களில் இவ்வியக்கம் விஸ்தரித்துள்ளது. முன்பு கட்டுப்பாட்டிலிருந்திராத புதிய இடங்களில் கூட ஸ்திரமாக காலூன்றி நிற்கின்றார்கள். அதில் ஒன்றுதான் போபால் நகரம். அங்கு ஒரு தொழிற்சாலையை அமைத்து இருந்தனர். 16 மாநிலங் களில் இருந்தும் மொத்தமாக 4 ஆயிரம் சதுரகிலோமீற்றர் பரப்பு டைய நிலம் இவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. 16 மாநிலங்களிலுள்ள 194 மாவட்டங்களில் இவர்களின் பிர சன்னம் உண்டு.
அவற்றில் 58 மாவட்டங்களில் சொந்தமாக அரசு ஒன்றை ஸ்தா பித்து ஆட்சி நடத்துகின்றனர். இங்கு சொந்தமாக நீதிமன்றங்கள் வைத்தி ருக்கின்றார்கள். இங்கு இவர்களின் கட்டுப்பாட்டி லுள்ள மக்கள் இவர்களுக்கு வரி செலுத்துகின்றனர். வருடாந்தம் இந்திய ரூபாயில் 200 கோடி வரி இவர்களுக்கு கிடைக் கப்பெறுகின்றது. இவர்கள் இந்தியாவின் தமிழீழ விடுதலைப்புலிகளாக உள்ளனர் என்றுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக