15 அக்டோபர் 2010

வேலணையில் இளம் யுவதி மீது ஈ.பி.டி.பி பாலியல் முயற்சி!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சிறுவர் போராளியான யாழ்.வேலணையை சேர்ந்த ஒருவரை கடந்த சனிக்கிழமை நள்ளிரவு ஈ.பி.டி.பி. சந்தேகநபர்கள் கொண்ட குழு ஒன்று கூட்டாகப் பாலியல் வல்லுறவுக்கு முயற்சித்திருக்கின்றது.
மூன்று முச்சக்கர வண்டிகளில் வந்த சுமார் 10 பேர் கொண்ட குழுவினர் சிறுமியின் வீட்டுக்குள் அத்துமீறிப் புகுந்தனர். சிறுமியை தரதர என்று வெளியில் இழுத்து வந்து பாலியல் ரீதியிலான துன்புறுத்தல் செய்யத் தொடங்கினர்.
குடும்ப அங்கத்தவர்கள் சிறுமியைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அடித்துப் போடப்பட்டார்கள். சிறுமி பலத்த எதிர்ப்பை வெளிப்படுத்தி இருக்கின்றார். சிறுமியின் குடும்ப அங்கத்தவர்களுடன் ஏற்பட்ட கைகலப்பு, சிறுமியின் பலத்த எதிர்ப்பு ஆகியன இக்குழுவினருக்கு பாதகமாக அமைந்தன.
இவர்கள் சிறுமியை விட்டு விட்டு போனார்கள். போகும்போது மீண்டும் வருவோம் என்று மிரட்டும் தொனியில் கூறி விட்டு சென்றனர். சிறுமி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை வேலணை உப பொலிஸ் நிலையத்துக்கு சென்று இப்பாலியல் வல்லுறவு முயற்சி சம்பந்தமாக முறைப்பாடு மேற்கொண்டார்.
கூட்டாகக் கற்பழிப்பு முயற்சியில் ஈடுபட்டவர்களில் இருவரின் பெயர்களைக் கூறி இருக்கின்றார். ஆயினும் பொலிஸார் இம்முறைப்பாடு தொடர்பாக நடந்து கொண்ட விதத்தில் சிறுமிக்கு திருப்தி இருக்கவில்லை.
வீடு வந்த இவர் மிகவும் மனம் உடைந்து காணப்பட்டார். மீண்டும் இக்குழுவினர் வரக் கூடும் என்கிற அச்சத்தால் அடுத்த நாள் திங்கட்கிழமை அலரி விதையை உண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
ஆயினும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இவர் தெய்வாதீனமாக உயிர் தப்பி உள்ளார். இவருக்கு வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சை வழங்கப்படுகின்றது. இவரது உடலில் கடிகாயங்கள் காணப்படுகின்றன.
கூட்டாக பாலியல் வல்லுறவு முயற்சியில் ஈடுபட்டவர்கள் கடித்திருக்கின்றார்கள். சிறுமியைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டபோது அடித்துப் போடப்பட்ட குடும்ப அங்கத்தவர்களும் இதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.
இச்சிறுமியும், சிறுமியும் குடும்பத்தினரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் சில மர்மநபர்கள் வைத்தியசாலையில் உலாவி வருகின்றனர் என்று வைத்தியசாலை வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இச்சிறுமிக்கு பெற்றோர் கிடையாது. யுத்தத்தின் இறுதி நாட்களில் வன்னியில் இருந்தவர். வன்னியில் இருந்து இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்றபோது அரச படையினரால் கைது செய்யப்பட்டுப் பின் ஜனவரி மாதம் விடுவிக்கப்பட்டார். யுனிசெப் நிறுவனத்தால் பராமரிக்கப்படும் சிறுவர்களில் இவரும் ஒருவர்.

1 கருத்து:

  1. ஆக யாழ மண் மறுபடியும் தனது "சகஜ" நிலைக்கு திரும்பிவிட்டது. இது மஹிந்தவின் சிந்தனையா? டக்கியின் சிந்தனையா? இவைகளுக்காகத் தானே இனததையே காட்டிக் கொடுத்தார்கள் இந்த அடிமை நாய்கள். யாழ்

    பதிலளிநீக்கு